உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

63

டி

பட்டு என்பது ஒளியையும், ஒலியையும் குறிக்கும் சொல். ‘பட்டுப் பட்டென மின்வெட்டுகிறது! பட்டொளி செய்கிறது; பட்டென்று அறைந்தான் என்பவை வழக்கில் உள்ளவை. மின்வெட்டுதற்கும், ஓர் அறை அறைதற்கும் ஆகும் பொழுதில் விரைந்து வா என்பதே ‘பட்டெனவா' என்பதன் பொருளாம். இவ்வாறே ‘படக்கென' என்பது நரம்பு சுண்டுதலையும், 'கடக்கென என்பது ஒன்றை ஒடித்தலையும், ‘கடக்’கென என்பது வண்டி உருளை ஒருசிறு பள்ளத்தில் விழுந்து எழுதலையும், ‘பொசுக்’ கன என்பது வெதுப்பும்நிலத்தில் அல்லது தீயில் இருந்து காலடி எடுத்து வைத்தலையும் ‘பசக்'கென என்பது வழுக்கி விடுதலையும், 'துண்'னென என்பது ஒரு நடுக்கும் நடுக்கு தலையும் ஒப்பு வகையால் சுட்டுவனவாம். இவற்றில் வரும் என என்பதும் போல என்னும் பொருள் தருவதாம். இவ்வாறே செக்கெ'னச் சுற்றல் என்பது விரைவின்மையையும், தடம் மாறாமையையும் உவமையால் குறிப்பதாம். 'தொக்கெ’ன நினைத்தல் என்பது இளைப்பாக அல்லது இளப்பமாக எண்ணலாம். தொக்கு, அரைப்பட்டது.

இனிச் 'சிக்கெ'னப் பிடித்தல் என்பது ‘சிக்கென்று பிடித்தல்' எனப்பொருள் தருவதாம். சிக்கென என்பது இறுக்கமாக எனப்பொருள்தரும் சொல். 'சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே' என்பது மணிமொழி.

சடை யாக

-

சிக்குடை என்பது இறுக்கவுடை; சிக்கனம் என்பது இறுக்கமாகப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ளல். குழந்தைகள் கூந்தலைச் சீருறப் பேணுதல் இல்லாமையால் சிக்கு' விழுதல் எவரும் அறிந்தது. அச்சிக்கே பலர்க்குச் சடைசடை யாகக் காட்சி வழங்கும்! அச்சடைக் கற்றை பிரிக்க முடியாவண்ணம் சிக்கிப்போய்ச் செறிந்து போய்க் கிடக்கும். அதனைக் கொண்டே சிக்கென என்னும் வழக்கு எழுந்தது. 'சிக்கம்' என்பதற்குக் 'குடுமி' 'கூந்தல்' என்னும் பொருள்களும் ‘உறி’ என்னும் பொருளும் வந்தது இதனால்தான். சிக்கென என்பது போன்றது 'கச்சென ‘கச்சென' என்பதும், 'கிச்சென' என்பதும். 'கச்சு' என்பது மகளிர் மார்புறை. அதனை இறுக்கிக் கட்டல் உண்மையால் 'கச்சு’ என்பது இறுக்குதல் பொருள் தருவதாயிற்று. கச்சு மட்டுமா இறுக்கிக்கட்டுவதாய் உள்ளது, ‘கச்சை’யும் அப்படித்தானே! ‘கச்சை கட்டுதல்’ என்பது கச்சையாம் இடைவாரில் இருந்து போர்ப்பொருளும் தருவதாயிற்று. சண்டைக்குப் போவார் உடை நெகிழாமல்