உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இருந்தால்தானே இரு கைகளையும் பொருதல் ஒன்றுக்கே பயன்படுத்த முடியும். அதனால் போருக்குப்போவார் கச்சைக் கட்டுதலைக் கொண்டு கச்சை கட்டல் என்பது போரிடல், போருக்கு அழைத்தல் எனப் பொருளாயிற்று. கச்சை என்பது 'மெய்ம்மறை' யாம் கவசத்திற்கும் ஆயது. மெய்ம்மறையாம் ஓடுடைய ஆமை ‘கச்சன்' எனப்பட்டது. ஏறுதழுவச் செல்வார் இடுப்பில் கட்டுவது கச்சை எனப்படுவது, அன்றி, ஏற்றின் கழுத்திலும் கச்சை கட்டல் உண்டு. அதனை அவிழ்ப்பார் அவ்வேற்றின் கொம்பில் சுற்றப்பட்ட துணி மணி என்பன வெல்லாம் அவர்க்கே உரியனவாம். ஏறுதழுவுதலும் ஒருவகைப் போர்தானே!

இனிக் குழந்தையரும், தொழில் செய்வாரும் 'கச்சை’ கட்டுதல் உண்டு. அது ‘கச்சனம்' எனப்படும். கச்சு - அண் - அம் என்னும் முச்சொற்கட்டே கச்சணமாம். அண் என்பதும் கச்சுப் போலவே நெருக்குதல் இறுக்குல் பொருள்தரும் சொல். இடையில். அரைஞாணில் மிக இறுக்கிக்கட்டப்படும் தாய்ச் சீலையேக் கச்சணம்' எனப்படும். அதனைப் பழநாளில் 'குறியிறை' என்றனர். இறையாவது இறுக்கிக் கட்டப்படுவது குறி என்பது வெளிப்படை. அவ்விடத்தைக் 'கோவணம்' 'கௌசணம்' என்பவை பற்றிக் கொண்டுள.

கச்சு என்பது கச்சணம் போல ஆ வர் டையில் இறுக்கிக் கட்டும் 'இலங்கோடு' என்பதையும் குறிக்கும். கச்சின் ஒலித்திரிபே கிச்சென வந்ததாம்! “கிச்சென்று கட்டு” என்று கயிற்றை இழுத்துக் கட்டுதலைக் குறிப்பர்.

குப்பென வியர்த்தல் என்பது ஒருசேர முளைக்கும் முளை போல வியர்த்தலாம். நாற்றங்காலில் விதை முளைத்தலையும், குப்பல், குப்பம், குப்பை என்னும் ஆட்சிகளையும் கருதுக.

னி

னி

னி வெள்ளென என்பது பொழுதுவிடிய, அல்லது பொழுது புறப்பட எனப் பொருள்தரும். இவ்வென என்பது ‘என்றமைய’ ‘என்றாக' என்னும் பொருள் தரும். இவ்வாறே நச்செனத் தும்மல், நக்கென வைத்தல் என்பவை ஒலிக்குறிப்பு வழியே வருவன.

இவ்வாறு ‘என' என்பது, உவமை உருபாகவும், ‘என்று' என்னும் பொருளதாகவும் வருதல் ஆய்வார் அறியத் தக்கதே. ‘கண்ணென' எனவரும் உவமையும், ‘வருகென வருதலும் நாம் அறியாதனவோ?