உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஒலிக் குறிப்பும் சொல் வடிவும்

சொற்றன்மை நிரம்பிய ஒலி சொல்லும், நிரம்பா ஒலி, ஒலிக் குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவிநிலைப் பட்டவை ஒலிக் குறிப்புக்கள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள்" என்பார் பாவாணர் (முதல் தாய்மொழி. பக்.5)

எம்மொழியில் மிகுதியான ஒலிக்குறிப்புகள் சொல் வடிவுற்று விரிவடைந்துள்ளனவோ அம்மொழி 'இயற்கை மொழி' என்றும் ‘முந்தை முதன்மொழி, என்றும் கொள்ளப் படும். மாந்தன் அறிவுநிலை பேச்சறியாக் குழந்தையின் அறிவு நிலையில் இருந்த காலத்திலே தான் ஒலிக்குறிப்புகள் சொல் வடிவு பெறுதற்குரிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது எண்ணத் தக்கது.

ஒலிக்குறிப்பு வழியே சொல்லாகி விரிவுற்றவை தமிழில் மிகப்பல. அவற்றுள் ஒன்று ‘குர்’ என்னும் ஒலிக்குறிப்பாகும்.

‘குர்' என்பது குரங்கின் வழியே மாந்தன் பெற்ற ஒலிக் குறிப்பு. குரங்குகள் அஞ்சினாலும் சினந்தாலும் களித்தாலும் சண்டையிட்டாலும் ‘குர் குர்’ என்னும் ஒலியெழுப்புதல் எவரும் அறிந்ததே. ஒலியின் வன்மை மென்மை அடுக்கு ஆகியவை வேறுபட்டாலும் ஒலிப்பு அடியாகிய ‘குர்’ மாறுவதில்லை.

குர்குர்' எனப் பல்கால் ஒலிக்கும் ஒலியைக் கேட்ட மாந்தன் அவ்வொலி எழுப்பிய உயிர்க்குக் ‘குரங்கு' எனப் பெயரிட்டான். குரங்கை நேரில் காணா இடத்திலும் அதனைக் குறிப்பதற்குக் ‘குர்' ஒலி பயன்பட்டது. அவ்வொலி பலரிடத்தும் பரவியது. 'குவா’ குவா’ என்பது வாத்தைக் குறிப்பதுபோல் 'குர்குர்' என்பது குரங்கைக் குறித்துப் பின்னே அவ்வொலி வழியே குரங்கு என்னும் பெயர் உண்டாகிப் பொதுமக்கள் ஆட்சியிலும் புலமக்கள் ஆட்சியிலும் இடம் பெற்றிருக்க ம் வேண்டும். இது சொல் வளர்ச்சியின் இயல்நெறியாம்.

து

குர்க்குர்>குர்க்கு>குரக்கு>குரங்கு.