உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 15

ஒலிக் குறிப்பால் தோன்றிய குரங்கின் பெயர் வழியே அதன் வடிவு, இயல்பு, செயல் என்பவற்றால் பல சொற்கள் கிளைத்தன. பல்லாயிரம் ஆண்டுகளாக இருவகை வழக்குகளிலும் அவை இடம் பெற்று இந்நாள் வரைக்கும் பெரு வாழ்வு வாழ்ந்து வருகின்றன. மேலும் மேலும் பெருக்க முற்றும் வருகின்றன.

மீன்களுள் சுறா என்பது ஒன்று; அச்சுறா வகையுள் ஒன்று குரங்கன் சுறா; இது வடிவால் பெற்ற பெயராம். 'குரங்கு மூஞ்சி' என்பதும் அத்தகையதே.

வண்டியில் பார்க்கட்டை (போல்) நிலத்தில் படா வண்ணம் வளைவாக தாங்கு கட்டை அமைப்பது வழக்கம், அதன் வடிவு கொண்டு 'குரங்குக் கட்டை' எனப்படுதல் உழவர்

நடைமுறை.

மழை இறைச்சல் வீட்டில் வராமல் இருப்பதற்குப் பல கணிமேல் அடிக்கும் வளை தட்டிக்குக் ‘குரங்குத் தாழ்' என்பது பெயர். இனிக் கொக்கி மாட்டும் தாழ்ப்பாள் 'குரங்குத் தாழ்ப்பாள்' என்று சொல்லப்படுவதும், 'குரங்குவாற் பூட்டு என ஒருவகைப் பூட்டு வழக்கில் இருப்பதும் குரங்கின் வடிவு வழிப்பட்டனவே.

கூரையின் கீழே சுவர் மட்டத்தில் அமைக்கப்படும் பரணி, அல்லது பரணை அதன் வளைவு கருதிக் ‘குரங்கு மச்சு' எனப் படுதல் வழக்காகும். கேழ்வரகுக் கதிர் அமைப்பு குரங்கின் இறுக்கிய கைபோல் இருத்தலைக் கண்டவர் அதற்குக் “குரக்கன்' எனப் பெயர் தந்தனர். மரக்கிளையில் மறைந்திருந்து வழியே செல்வாரை வருத்திப் பறிப்பவரின் இயலும் செயலும் கருதிய சங்கச் சான்றோர்,

'குரங்கன்ன புன்குறுங் கூளியர்' எனக்கூறியமை கருதத்தக்கது.

(புறம். 176)

குரங்குக் கைபோல் நரம்பு சுண்டி இழுத்தல் ‘குரக்கு வலி’ 'குரக்குக் கைவலி”, 'குரக்கைவலி', 'குரக்கை’ எனப் பல வடிவுகளில் வழங்கப்படுதல் எவரும் அறிந்ததே. பிறை நிலாவின் வளைவு குரங்கின் வளைவை ஒருவர்க்கு நினைவூட்டியமையால் ‘குரங்கி' என்றொரு பெயரைப் பெற்றது.

குரங்குதல் வளைதல் ஆயபின், வளைந்தது தாழ்தலும், தாழ்ந்தது குறுகுதலும் இயற்கை யாகலின் புலவர்கள் ஆட்சியில் ப்பொருள்கள் விரிந்தன. கவி என்னும் குரங்கின் பெயர்