உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

67

வழியே, கவித்தல், கவிப்பு, கவிழ்த்தல், கவிழ்தல், கவிகை எனப் பல சொற்கள் விரிந்தமை இவண் ஒப்பிட்டுக் காணத் தக்கதாம். இலைசெறிந்த மரக்கிளை தாழ்தல் இயற்கை, அதனைக் லைப்பொழில் குரங்கின' (657)

குறிக்கும் சிந்தாமணி

என்கிறது.

குதிரையின் பிடரிமயிர் வளைந்து படிவது; ஓடுங்கால் எழுந்து ஆட்டம் செய்வது. இவ்வியல் கண்ட சங்கச் சான்றோர், 'குரங்குளைப் புரவி”

என்றும்

(அகம். 376).

குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்றும் (அகம்.4) கூறினர். குரங்கு உளை என்பது வளைந்த தலையாட்டம்.

கரும்புப் பூவைக் கண்ட ஒரு சான்றோர், மழையில் நனைந்த கொக்குப்போல் அஃது இருப்பதாகக் கண்டார். அவர்தம் நுண்ணிய பார்வை, கொக்கு என்ற உவமையளவில் அமையாமல் ‘நனைந்த கொக்கு' என்று தெளிந்து கூறியது. கரும்புப் பூவின் வளைந்த தோற்றம், கொக்கின் கவிழ்பார்வை, கவியாம் குரங்கின் கவிழ்வு இவற்றை ஒருங்கே எண்ணி உவகை யடையுமாறு வளைய என்பதற்குக் ‘குரங்க’ என்னும் சொல்லை நயமாக ஆண்டுளார்.

“கரும்பின் கணைக்கால் வான்பூ மாரியங் குருகின் ஈரிய குரங்க”

என்பது அது.

(அகம். 235)

வளைந்த ஒன்று குறுகியதாகும் எனக் கண்டோமே;

அதனைக்,

66

'குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான்”

என்னும் கம்பர் வாக்கு தெளிவிக்கும்.

(பாசப். 5)

குரங்குப்பிடி கடும்பிடி; விடாப்பிடி; ஆதலால், விடாப் பிடி ‘குரங்குப் பிடி' எனப்படலாயிற்று. ஓட்டு முகட்டுக்குப் போடப்படும் காரை அமுக்குக்குக் 'குரங்குப் பட்டை' என்பது ஒரு பெயர். பனைமட்டையின் அடிப்பகுதியாய் வளைந்திருக்கும் பிடிப்புப் பகுதிக்குக் ‘குரங்கு மட்டை' என்பது பெயர்.