உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம்

15

குரங்கு செயலற்று ஓய்ந்திருத்தல் அரிது. ஆதலால், அதன் ஆட்டத்தை நினைத்துக் 'குரங்காட்டம்' எனப்படலாயிற்று. குரங்காட்டிப் பிழைக்கும் பிழைப்புக் கூட வயிற்றுப் பாட்டால் ஆங்காங்கு நிகழ்தல் கண்கூடு. 'குரங்கு மனம்' என்பது உளவியல் தேர்ச்சி.

சேடு, சேட்டை என்பவை இளமைப் பொருள் தருவன; அவை ஏடு, ஏட்டை என்பவற்றின் வழிவந்தவை. சிறுவர் வ குறுகுறுப்பும் துறுதுறுப்பும் பெரியவர்கள் பார்வையில் சேட்டையாகத் தோன்றலாயிற்று. அச்சேட்டையையும் 'குரங்குச் சேட்டை’ தனக்காக்கிக் கொண்டது.

இனிக் குரடு, கொரடி, குரண்டி, கொரண்டி (ஒருவகை முட்செடி) என்பவற்றின் பெயரும் குரங்கின் வளைவுப் பொருளால் ஏற்பட்ட செய்பொருட் பெயரும் இயற்செடிப் பெயருமாம்.

‘குறட்டை’ என்பதோ எனின் அப்பெயர்க் கொடையின் மூலம் அக்குறட்டையேயாம்! குறட்டை விடுபவர்க்குத் தம் குறட்டை ஒலி தெரியாது! ஆனால், பிறர் விடும் குறட்டை உருட்டி எடுத்தலை எவரே அறியார்?

ஒலிக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து, அதன் வழியே வளர்ந்து - செழித்த சொற்களையெல்லாம் பட்டியிட்டுக் காட்டல், மொழியின் இயற்கையையும் முன்மையையும் நிலை நாட்டுதற்கு அசைக்க முடியாச் சான்றாகத் திகழும் என்பதைஇக் ‘குர்' எனும் ஒலிக் குறிப்பும் காட்டுதல் உறுதியாம்.