உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஒன்றில் இருந்து ஒன்று

தமிழ் பழமைக்குப் பழமையாம் மொழி; அதேபோல் புதுமைக்குப் புதுமையாம் மொழி; பழமையில் இருந்து புதுமை பொருள் வளப் பூத்துப் பொலிவதற்காம் சொல்வளப் - பேறுகளையும் உடைய மொழி.

66

-

‘நீர்வாழ்வன' என்னும் ஆறெழுத்துச் சொல்லை ஒரு சித்தர் ‘நீரி' என ஈரெழுத்துச் சொல்லாக ஆக்கிப் படைத்து வழிகாட்டினார் என்றால், உடனே ஊர்வனவற்றை ஏன், ‘ஊரி' என வழங்கக் கூடாது என்னும் உணர்வை ஊட்டுவது தமிழ்வளம்!

அந்த உணர்வில் அழுந்தும் போதிலே, ‘அகடூரி' என்னும் சொல் தோன்றி, நமக்கு முந்தைப் பாட்டன் ஒருவன் அச் சொற்கோட்டையைப் பிடித்து வெற்றி கொண்டிருப்பதை விளம்பி, நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் தமிழ்வளம்!

அகடு ஊரி - வயிற்றால் ஊர்ந்து செல்வதாம் பாம்பு; ஊரி ஊர்ந்து செல்வது ; அகடு - வயிறு.

ஊரி' அகட்டோடு ஒட்டிக் கொண்டது மட்டுமோ? தனியே நின்று சங்கு, முகில், குழந்தை என்னும் பொருளையும் தரும். ஊரும் சங்கும், படரும் முகிலும், தவழும் குழந்தையும் ஊரி' எனத் தக்கவை தாமே! ஊரி புல்லுருவியையும் குறிக்கும் 'உருவி' என்பது ஊரியாகிவிட்டது. ஒரு மரத்தின் நீரையும் உரத்தையும் உருவி உண்ணும் - வளரும் அதனை ‘ஊரி' என்றது தகும் தானே!

-

இனிக் ‘கல்வி’, ஈறு குன்றிக் ‘கல்’லாக நின்று, ஊரியுடன் ஒட்டிப் புதுவரவுக் ‘கல்லூரி'யாகப் பெயர் காட்டித் திகழ்வது நினைவில் எழுமன்றோ? உடனே அவ்வெழுச்சியின் ஊடே சிந்தாமணி,

“கலத்தற் காலம் கல்லூரிக் கொட்டிலா.., கற்குங் காட்சியைக் கண் முன் காட்டி. நம் புது நோக்கை முது நோக்காகிக்