உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் 15

குறுமுறுவல் கொள்ளல் விளங்குகின்றது. ‘ஊரி’ நிற்க வேறொரு சொல்லைக் காணலாம்.

பேருந்து, சரக்குந்து, மகிழ்வுந்து, திறவையுந்து, மிதியுந்து, துள்ளுந்து என உந்து வகைகள் பல உலாவரக் காணும் நாம், அவற்றின் காலுருள்கள் (Tyres) பழுதுற்றால், உடனே பயன் கொள்வதற்காகப் ‘பதிலி'களோடு அவை செல்வதையும் காண்கிறோம். ‘பதிலி’களாம் அக்காலுருள்களுக்கு எப்பெயர் வைக்கலாம் என நாம் எண்ணுங்கால் புறப்பாட்டுப் புன்முறுவல் காட்டுகின்றது ஒரு புறப்பாட்டு:

எருது இளையது; நுகக்கோலில் புதுவதாகப் பூட்டப் பட்டது; மேடறியாமல் பள்ளமறியாமல் இழுக்கக் கூடியது; வண்டியிலோ பாரம் மிக்குளது! வண்டியின் நிலை என்னாகும்? வண்டியின் அச்சு முறிந்தால் வண்டியோட்டம் என்னாகும்? அச்சாணி இல்லா வண்டி முச்சாணும் ஓடாதே! அச்சிலா வண்டி அரைவிரலம் (அரை அங்குலம்) கூட அசையாதே! கடல் உப்பு அள்ளிக் கல்நாடு (மலைநாடு) செல்லும் வண்டி உரிய இடத்தை அடைய வேண்டுமே! இவற்றை எண்ணாமல் உப்பு வணிகர் புறப்பட முடியாதே!

உமணராம் உப்பு வணிகர் இவற்றை எண்ணிப் பார்த்தனர். வண்டியின் பார்தாங்கும் நெடிய கீழ் மரத்தின் கீழே ஓர் அச்சினைக் கட்டிக் கொண்டு சென்றனர். அவ்வச்சை எப்பெயரிட்டு வழங்கினர்? 'சேம அச்சு' என்பது அவர்களும் அவர்கள் தந்தையாரும் அவர்கள் முந்தையரும் வழங்கிய பெயர். சேமம்-பாதுகாப்பு; பாதுகாப்புக்காகச் சேமித்து வைக்கப்பட்ட அச்சு. "உமணர் கீழ்மரத்து யாத்த 'சேம அச்சு' என்பது புறநானூற்றுத் தொடர், ஒளவைப் பாட்டி அருளிய அருமைப் பாட்டில் இடம் பெற்றுள்ளது இது (102).

6

பாட்டி வைத்த பழந்தேட்டு, வழிப்பேரர் வளமாகத் திகழ்வது போல் 'சேமம்' பெருகிவருகின்றது. எப்படி?

நாம் மேலே சுட்டிய பேருந்து முதலியவற்றின் பதிலியாம் உருள்களுக்குச் சேம உருள் (Stepney wheel) என்னும் மொழி யாக்கம் உதவுகின்றது.

பாதுகாப்புக் காவல் படையை (Reserves) சேமப்படை எனவும், அவர்கள் குடியிருப்பைச் சேமப்படைக் குடியிருப்பு எனவும் வழங்க உதவுகின்றது.