உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் - சொல்

71

ஓஓ! ஔவையாரை நாம் இவ்வளவு பயன்படுத்திக் காண்டுள்ளோமோ' என்று வியப்புறும் போதே, மின்னற் கீற்றுகள் பலப்பல பளிச்சிட்டு நம் கண்களைப் பூத்துப் போகச் செய்கின்றன.

சேமவில்லைச் சுட்டுகின்றது சிலம்பு (2.42).

'ஒரு பெருங்கரும்புவில் இரு கரும்புருவமாக' என்பதற்குச் சேம வில்லையும் ‘கூட்டி' என்றார் அடியார்க்கு நல்லார்.

'காமன் சிலை இரண்டு' எனவரும் சிந்தாமணிக்குக் ‘காமன் தன் கையில் வில்லையும் சேமவில்லையும்' என்றார் நச்சினார்க்கினியர். (2065).

காமனார் சேமவில் என்னும் தக்கயாகப் பரணிக்குக் "காமனாருடைய சேமவில்லை ஒன்றுக்கு இரண்டுள்ளன என்று சேமப்பெருக்கைக் காட்டினார் அதன் உரையாசிரியர் (23).

“சேமத்தேரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார் கம்பர். 'சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர்' என்பது அது. தேருடன் மட்டுமோ நின்றார் கம்பர்? "சேமத்தார் வில்' (பால 1187) 'சேமத்தின் சிலை (உயுத். 2301)

"சேமப்படை' (உயுத் 1323. 'சேமவில்' (ஆர. 922) ‘சேம வெம்படை' (உயுத். 1323) என்பனவற்றையும் நிறுத்துகின்றார்.

சேமம் பதிலியாம் பொருள் அளவினும் விரிந்து, பாதுகாப்பு என்னும் பொருள் நிலைக்கு வளர்வதையும் நாம் காண்கின்றோம்.

அயலார் பார்க்கக் பார்க்கக் கூடாமல் அமைத்துக் காக்கும் திரையைச் ‘சேமத்திரை' என்கிறது பரிபாட்டு!

கன்னிப்பெண்டிர்க்குக் காவலாளராய் அமைந்து, அக்காவற் கடமையைக் கருத்துடன் செய்யும், உரிமைப் பாட்டியரைச் ‘சேம மடநடைப் பாட்டியர்' என்கிறது அதே பரிபாட்டு (10).

காவல் வீரர் கடமை புரிந்து பின்னர் ஓய்வு கொண்ட பொழுதைச் ‘சேமம் மடிந்த பொழுது' எனக் காட்டுகிறது குறிஞ்சிப்பாட்டு (156)