உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பாடிவீட்டுக் காவல் கொண்டிருப்பினும்கூட யாமப் பொழுதில் உறங்க வேண்டும். உடல் நலக் கட்டாயத்தைப் பிற்கால ஔவையார் பாட்டு 'சேமம் புகினும் யாமத்துறங்கு என்கின்றது.

இவற்றையெல்லாம் விஞ்சக் கொடிகட்டிப் பறக்கின்றார். குறுந்தொகைப் பாட்டர் ஒருவர்.

பனி நாளில் குளிர்நீர் பருக எவரே விரும்புவர்?

வெதுவெதுப்பாம் நீர் பருக எவரே விரும்பார்? வெதிம்பிய நீரை வெதுப்பம் குறையாமல் போற்றி வைத்துக் கொள்ளவும், வேண்டும் போது அவ்வெதுப்புடனே பருகவும் வாய்ப்பாக ஒரு கலம் இருந்தால் எவ்வளவு வாய்ப்பாக இருக்கும்? Thermosflask- இன் பயன் கொள்ளும் நமக்கு அதனைக் கண்டறியாப் பழங்கால நிலமை இரங்கத் தக்கதாகவன்றோ தோன்றுகின்றது! ஆனால் குறுந்தொகையார் நம் இரங்கத் தக்க நிலைமையை உண்ண கையும் வெண்ணகையும் ஒருங்கு காட்டிச் சுட்டுகின்றார்.

-

Thermosflask என்னும் ஒரு கலத்தைப் படைத்து எவரோ தந்தார், அதற்கு ஒரு சொல்லையும் நீங்கள் படைத்தீர்கள் இல் ல்லையே! உங்களால் முடியவில்லை ல என்றாலும் யான் படைத்து வைத்துள்ள சொல்லை எடுத்துப் பயன் கொள்ளவும் முடியவில்லையோ' என்கிறாரே!

"பனி நாளிலும் லிரும்பத்தக்க வெதும்பிய தெளிந்த நீரைச் சேமித்து வைக்கும் செப்பு” யாது, 'சேமச்செப்பு' அது வெதுப்பம் வெளியே போய்விடாமல் சேமித்து வைக்கும் செப்பு ஆதலால் அப்பெயர் என்பதை.

66

அற்சிர வெய்ய வெப்பத் தெண்ணீர் சேமச் செப்பு”

என்கிறார்.

(277)

சேமப்பாதுகாப்பு எத்தனை சேமிப்புகளுக்கு இடமாகி

யுள்ளது!

வைப்பகங்களில் (Bank) வாடகைக்குக் கிடைக்கும் பாது

காப்புப்பெட்டகம் (Safe) சேமப்பெட்டகம் ஆகலாமே!

Saving Bank - 'சேமப்பெட்டகம் ஆகலாமே!

Saving Bank Account - சேமக் கணக்கு' ஆகலாமே!