உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

Ware House - 'சேமக்கிடங்கு' ஆகலாமே!

73

பாதுகாப்பின்றிச் சேமிப்பு நிலைக்குமா? நீடுமா? நலக் கேடின்றி அமையுமா? ஆகலின், சேமப்பாதுகாப்பு ‘நலப்பாடும்' ஆயிற்று; 'சேமம்' சேமம்' அறிய ஆவல் என வினவலும், சேமம்தானே என நேர்வினவலும் ஆயிற்று.

அஞ்சல்

‘சேமம்’ ‘சேமிப்பு' என்பன எத்தனை எத்தனை கலைச் சொல்லாக்கம் கொள்ள வாய்த்துள்ளன! வாய்க்கவும் உள்ளன! ஒன்றில் இருந்து ஒன்று பெருகுதல் தானே இயக்கச் சான்று! உயிர்ப்புச் சான்று!

ஒன்று ஒன்றாகக் கூடித்தானே கோடியும் கோடான கோடியும்! ஒன்று கொடுத்தாலும், 'கோடி' என மகிழ்வது. ‘உடை’க்கு மட்டுமன்று, சொல்லுக்கும் ஆம்.