உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கட்டுரை

முன்னுரை

‘கட்டுரை' என்பது ஓர் அருமையான சொல்; அது மிகப் பொருட் செறிவுடைய பழங் சொல்லாகும்.,

சிலப்பதிகாரத்தில் கட்டுரை, உரைபெறுகட்டுரை, கட்டுரை காதை என்னும் நூலின் உட்பிரிவுகள் அமைந்து உள்ளன. கட்டுரை என்னும் சொல்லும் மிகுதியாக எடுத் தாளப்பட்டுள்ளது. அதற்குப் பழைய உரையாசிரியர்கள் 'பொருள் பொதிந்த சொல்' 'உறுதியுடைய சொல்' எனப் பொருள் கூறியுள்ளனர்.

கட்டுமானம்

நாம் ஒரு வீடு கட்டத் திட்டமிட்டால் முதற்கண் கட்டு மானப்படம் வரைவோம்; அதன் பின் அதில் கண்டவாறு கட்டடம் எழுப்புவோம். அதுபோலவே கட்டுரையும் திட்ட மிட்டு வரையறைப்படுத்திக் கொண்டு எழுதப்பட வேண்டும். அப்பொழுதுதான் அதன் அமைப்பும், பொருளும் தெளிவும் சிறப்பாக அமையும்.

கட்டழகு

ஏன்?

சிலர் உடலைப் பார்த்ததும் ‘கட்டான உடல்' என்கிறோம். அளவுக்கு விஞ்சி மெலிவு இல்லாமலோ, ஊதிப் போகாமலோ உரிய அளவில் பொருத்தமாக அமைந்த நல்ல உடலையே ‘கட்டுடல்' என்றும், அத்தகையவரையே ‘கட்டழகன்’ கட்டழகி' என்றும் கூறுகிறோம். அதற்கு ஏற்பவே கட்டுரையும் அளவாலும் அமைப்பாலும் கட்டழகு உடையதாக விளங்க வேண்டும்.

கட்டுவிரிதல்

மொட்டு அல்லது முகையாக இருக்கும் பூவில் மணமும் தேனும் உண்டு; எனினும், அவை அவ்வளவாக வெளிப்பட்டுப்