உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

75

பரவுவது இல்லை; ஆனால், அது கட்டுவிரிந்து விட்டால் எங்கேயோ திரியும் வண்டும் அங்கே வந்து மொய்க்க ஆரம் பிக்கின்றது. அந்தத் தேனிலும், நறுமணத்திலும் தன்னை மறந்து இன்பமடைகின்றது. அதுபோல், உள்ளத்தில் அடங்கிக் கிடக்கும் பொருளை வெளிப்படுத்திக் கற்பவரை படுத்துவதே கட்டுரையின் வெற்றிக்கு அடையாளமாகும்.

கட்டுச்சோறு

வயப்

‘கட்டுச் சோறும் கற்றவித்தையும்' என்பது ஒரு பழமொழி. கட்டுச்சோற்றைப் 'பொதி சோறு' என்பர். பொதிசோறு துணி முதலியவற்றால் பொதிந்து வைக்கப்பட்ட சோறாக மட்டு மில்லாமல் சுவை பொதிந்தும், கெட்டுப்போகாத தன்மை பொதிந்தும் அமைந்த சோறாகும். அதுபோல் கட்டுரையும் நல்ல நடையால் பொதியப்பெற்று உயர்ந்த பொருள் பொதிந்ததாக விளங்க வேண்டும்.

கட்டு உரை

“கட்டுரை” என்னும் சொல்லை இரண்டாகப் பிரித்தால் ‘கட்டு’ ‘உரை’ என இரண்டு ஏவல்கள் உண்டாகும். அவ் ஏவலை ஏற்றுத் திட்டமிட்டுக் கட்டி உரைக்கும் உரையே கட்டுரையாய்ச் சிறப்புறும்.

இட்டுக்கட்டுதல்

6

பு

கட்டுரை என்பது என்பது இட்டுக் கட்டிச் சொல்லும் உரை எனவும் பொருள் தருவதாயிற்று. பொய்யுரை புனைந்துரை ஆகியவையும் கட்டுரை எனவே சொல்லப்படும். எனினும் அவையும் கற்பவரையும் கேட்பவரையும் வயப்படுத்துவன வாகவே அமைந்தால் தான் நிலைபெறுகின்றன என்பதை மறக்கக் கூடாது.

கட்டமைப்பு

கட்டுரை, சிறப்பு அடைவதற்கு உவமை, பழமொழி, மரபுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும். நாம் கூறும் கருத்தை வலியுறுத்தத்தக்க மேற்கோள்களைத் தக்க இடத்தில் செய்யுளாகவும் உரைநடையாகவும் எடுத்துக் காட்டுதல் வேண்டும். நிறுத்தக் குறிகளைத் தவறாது இடுதல் வேண்டும். கையெழுத்து அழகோ கற்பவர்க்குக் காட்சியின்பம் தருவதாய் முத்துக் கோத்தால் போல விளங்க வேண்டும்.