உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கட்டு திட்டம்

இளங்குமரனார் தமிழ்வளம்

15

கட்டுரையைப் பார்த்தவுடனேயே, இன்னபொருள் பற்றி க்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முன்னுரையும் இக்கட்டுரையில் அமைந்துள்ள பொருள் முடிவு இதுவே துவே என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முடிவுரையும் கொண்டிருத்தல் வேண்டும். இடையே கூறப்படும் செய்திகளும் ஏறத்தாழ ஒத்த அளவில் பத்திப் பிரிவுடன் விளங்குதல் வேண்டும்.

முடிவுரை

இவற்றைப் போற்றி எழுதும் புலமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்வது, தேர்வில் மதிப்பெண் பெருகுவதற்கு வாய்ப்பாவதுடன் பின்னாளிலும் மதிப்புமிக்க எழுத்தாள ராவதற்கும் வகை செய்யும் என்பது உறுதி.