உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கல்லும் கலையும்

“கல்” என்பது ஓர் ஒலிக்குறிப்பாகும். இயற்கையினிடை வாழ்ந்து இன்பங்கண்ட ஆய்வு நலமிக்க முன்னோர் ஆர வாரத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் “கல்” என்னும் ஒலிக்குறிப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

-

படையணிச் செலவும், பாசறை நிலனும், பேரூர் மறுகும், சீறூர் மன்றமும், கார்க்கடல் அலையும், கடிப்பிணை முரசும், நீர்வழி தூம்பும், கார் - செறிவானும் இன்ன தன்மைய பலவும் கல் என்னும் ஆரவாரத்தை உடையன என்பதை இலக்கியங் களில் பெருகக் காண்கின்றோம்.

66

66

  • கல்லென் கடல்கண்டன்ன கண்ணகன் தாளை" புறம்351

66

“கல்லென் பாசறை”

“கல்லென் பேரூர்"

“கல்லென் சீறூர்"

“கல்லென் கடற்றிரை”

“கல்லென் முரசம்"

“கல்லென் தூம்பு"

...

...

...

....

....

...

....

301

சிலம்பு

12:12

ஐங்குறு

382

சீவக

2097

1063

1280.

....

....

....

66

“கல்லெனத் துவன்றிக் கண்கிளர்ந்ததுபோல்'

பெருங்

1:55:113.

எனினும், படை முதலாய இவற்றின் ஒலி ஒரு வழியே கல்லென ஒலிப்பதில்லை. பலதிறப்பாடுற்றதாகும். இருப்பினும் தொல்பெரும் இலக்கியங்கள் ‘கல்’லெனும் ஒலிக் குறிப்பைப் பயன்படுத்துவதிலிருந்து அதற்கோர் தகவுடைய காரணம் இருந்தேயாகவேண்டும் என்பது உண்மையாகின்றது.

உலகத் தோற்றத்தே முதலாவதாக விண்ணும், அதன் பின் முறை முறையே வளியும், தீயும், நீரும், மண்ணும் தோன்றின என்பது ஆய்வியல் முடிவு. இறுதியான மண்ணின் தோற்றத்திலும் ‘கல்’