உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் 15

தோன்றிய பின்னரே மணலும் மண்ணும் தோன்றின என்பதும் தெளிவு. ஆதலால் கல்லே நிலத்தோற்றத்தின் தாய் எனலாம். இது இவ்வாறாக, தமிழ்க்குடியின் தொன்மை கூறவந்த ஆன்றோருள் ஒருவர்,

66

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி

وو

எனக் கூறினார். இக்கூற்றுள் தமிழ்க் குடியின் தொன்மையே அன்றி நிலத்தோற்றத்தில் முறைமையும் தெளிவாக்கப் படுகின்றது. கல் தோன்றிவிட்டது; ஆனால் மண் தோன்றவில்லை என்பதனால் கல்லின்பின் மண் தோன்றியது எனப் படைப்பு முறைமையும் தெளிவு ஆக்கப்படுகின்றது. ஆனால் இங்கே காட்டப்பெற்ற கல் (மலை) தோற்றமுற்று விட்டாலும் ‘கல்' என்னும் பெயருடன் தோன்றியிருக்க முடியாது.

ஒரு பொருள், தோன்றிய பின்னரே அதன் இயல்புக்கு ஏற்பப் பெயரமைப்பதும், அமைவதும் இயற்கை. அதுவே வளமிக்க மொழியும், ஆய்வுநலமிக்க அறிஞரும் கொள்ளும் நெறி. கல்தோன்றி, மண்தோன்றி, உயிர்தோன்றி, உணர்வுடைய மனிதன் தோன்றி, வாழத்தொடங்கி, உலகத்தே உருண்டு, புரண்டு, தவழ்ந்து, தாவி நடந்து பழகியும், ஆட்டி, அசைத்து, நீட்டிக் குவித்துத் தசைப் பயிற்சி செய்தும், குழறி, உளறி, சிரித்து, உரப்பி, ஒலித்துக் கருத்து வெளியிட்டும் வாழ்ந்த பின்னரே மொழியுணர்வு தோன்றியிருக்கக் கூடும். இவ்வாறு முதற்கண் தோற்றமுற்ற சொற்களும் எளிய ஓசையும், இயற்கை அமைதியும், பல்பொழுதும் கேட்டறிந்த வாய்ப்பும் உடையதாக இருந்தே தோன்றியிருக்க முடியும். இவற்றையெல்லாம் நோக்குங்கால் மாந்தன் கருத்தைக் கவர்ந்த சொற்களுள் 'கல்'லும் ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். அன்றியும் அவன் கண்ட முதன்மைச் சொற்கள் சிலவற்றுள் ஒன்றாகவும் நின்று இருக்கலாம்.

6

கல் தோன்றிவிட்டது; மண்ணும் தோன்றிவிட்டது; உயிரும் பிறவும் தோன்றிவிட்டன. நீர் கொண்டு நெடுவான் பரவிய முகில் கடனாற்ற, இயற்கையன்னை மெய்குளிர்ந்து வண்ணப் போர்வை போர்த்து வனப்பு மிக்க கன்னியாக விளங்கினாள். வானைத்தொடும் மலையும், வானத்து மீனை நிகர்க்கும் சுனையும் பற்பல இடங்களில் இலங்கின,. இவற்றைக் கண்டு உள்ளம் பறிகொடுத்த மொழிவளம் பெறாத முதுகுடிகள் தங்களுக்குள் சுவைத்துத் திளைத்தனர். முட்டி முடுகித் தத்தித்