உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

79

தாவி ஆரவாரத்தோடு எழும் ஒலியில் செவியையும், காட்சியில் உள்ளத்தையும் தந்து நின்றனர். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்து பல வழிகளிலும் பொறிபுலன்களைச் செலுத்தினர்.

என

அருவி வீழும் அழகும் ஒலியும் அவர்கள் புறக்கண்ணையும் புறச்செவியையும் விட்டு அகலினும், அகக்கண்ணையும், அகச் செவியையும் விட்டு அகல்வதாக இல்லை. அவ்வருவியின் டு ஒலியிலே ஒன்றிய ஒரு பெருமகன் காதில் அவ்வொலி “கல்” ஒலித்திருக்கவேண்டும். ‘கல்' என ஒலித்த அவ்வொலியாலேயே அவன் அருவியைக் குறிப்பதாக மாறியிருக்கக் கூடும். அதன் பின்னரே மலைக்கும் காரணம் கருதிய பெயராய் வழிவழி வளர்ந்திருக்க வேண்டும்.

“காகா” என்னும் ஒலியுடைய பறவையைக் காக்கை என்பதும், கூ கூ என்னும் ஒலியுடைய பறவையைக் கூகை என்பதும் இன்னும் வழக்கில் உளவாதலைக் காண்கின்றோம் இதுபோன்றே, கல்லெனும் ஒலியுடன் வீழும் அருவியும், அருவி சூழும் இடமும் கல்லாகக் காரணம் குறிக்கப்பெற்றது தெளிவாகும். மொழி வளமுற்ற காலத்தே ‘கல்லலைத் தொழுகும்” “கல்லென அறையும் ஒல்லென் கம்பலை” “கல்லெனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி” என இன்னவாறு கூறியோரும் பறையும் முரசும்போல முழக்கும் அருவி என்றும், அருவி தாலாட்டக் கண் துயிலும் யானை என்றும், மயிலாட்டத்திற்கு அருவி பறையடிக்கின்றது என்றும் விவரித்தோரும் உளர். ‘கல்’ எனத் தத்தி நீர் விழும் மதகுக் கலிங்கில், கலிங்கு என்ற பெயர்கள் உண்மை கண்கூடு. கலிங்கில் பெயரால், பெயர்பெற்ற ஊர்களும் உண்டு. கலிங்கப்பட்டி, கலிங்கல் மேட்டுப்பட்டி என்பன அவற்றுள் சில.

கல்லெனும் ஒருமை ஒலி காலம் செல்லச் செல்லப் பல் வேறுபட்ட ஒலிகளைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் பெற லாயிற்று. அது போழ்து, ஒரு சிறு மாற்றமும் பெற்றது, கல் எனும் ஒலிக்குறிப்பு, கலியாயிற்று. மிகுதி, ஆரவாரம், துள்ளல் ஆகிய பொருள்களிலெல்லாம் பின்னே வழங்குமாறான பெருமிதச் சொல்லாகக் கலிநின்றது. இதனால் ‘கலிகெழுகடவுள்”, “கலி கெழு கடல்”, “கலி கெழுபாக்கம்” “கலி கெழுமறுகு” “கலி கேழ் ஊர்”, “கலி கெழுமீமிசை” என மிகு வொலியைக் குறிப்பதும் காண்க.

முதல் மனிதன் இயற்கையில் அமைந்த மலைப்பிளவு குகைகளுக்கிடையே தன் வாழ்வைத் தொடங்கினான். எனினும் காடு விலங்குகளும் பருவ வேற்றுமைகளும் அவனை

6