உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

137

அத்தொழில். அரசர் இருந்து கோன்மை செலுத்தும் கோநகர்க் கண்ணே செய்யப் பெறுவதாம் தொழில் அதுவேயாம். இதனை எந்நாட்டு வரலாறும் தெள்ளிதிற் காட்டுதல் அறிந்ததே!

ம்

ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் பொற்காசு அடித்த இடம் தங்கசாலைத் தெருவாக இன்றும், சென்னையில் விளங்குதல் கண்கூடு. பண்டை நாளில் தங்கசாலையை அக்கசாலை’ (அஃகசாலை) என வழங்கினர். இந்நாளில் இரும்பாலை, செக்காலை, நூற்பாலை என்று விளங்குவன போலத் தங்க சாலை விளங்கியது. தங்க வேலை நடைபெறும் இடத்தை ‘அக்கசாலை' என்பது முந்தையோர் வழக்கு.

கோவலன் பொற்கொல்லனை முதற்கண் கண்ட டத்தைக் குறிக்கும் இளங்கோவடிகளார்.

"கோவலன் சென்றக் குறுமகன் இருக்கையோர் தேவகோட்டச் சிறையகம் புக்கபின்”

என்றார். இதனை ‘அக்கசாலை' என்றார் அரும்பதவுரையார். அக்கசாலைப் பள்ளி என்றார் அடியார்க்கு நல்லார் (19. 125-6).

கொற்கை என்பது கொல்லுத்தொழில் சிறக்க நடை பெற்ற இடம் என்பதைச் சுட்டும் என அறிந்தோம். பொற்கொல்லர் வாழும் தெருவும், பொன்வேலை நடைபெறும் தெருவும், ‘அக்கசாலை' எனப் பெயர் பெறும் என்பதையும் அறிந்தோம். கொற்கையில் கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது என்பதை இச்சொல்லைக் கொண்டு மட்டுமே முடிவு செய்து விடுதலினும், பிற பிற சான்றுகளும் உண்டாயின் வலுவாம் அன்றோ; ஆம்; இதனை நிலைப்படுத்துதற்கு மறுக்கொண்ணாச் சான்றுகள் கொற்கைப் பழநகரில் ஒன்றிரண்டல்ல; பல இன்றும் உண்மை ஆய்வார்க்குத் தனிப்பெரு மகிழ்வு ஊட்டுவதாம். அவற்றை முறை முறையாய் முழுதுறக் காண்போம்.

கொல்லுத் தொழில் வழியாகப் பெற்ற பெயரே 'கொற்கை' என்பதை முன்னர்க் கண்டோம். நிறுவத்தக்க சான்றுகளைக் காண்போம்.

அதனை

கொற்கையில் விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. அதனைச் ‘சுந்தர விநாயகர் கோயில்' என்று வழங்குகின்றனர். ‘அக்கசாலை விநாயகர் கோயில்' என்னும் பெயரும் அதற்கு உண்டாம்! குளக்கரையில் வளமான வயல்வெளியின் ஊடே அமைந்துள்ள அப்பழங்கோயில் எண்ணற்ற கல்வெட்டுகளைத் தன்னிடத்தே கொண்டு உள்ளது.