உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

திங்களூரில் அப்பூதியடிகள் அமைந்த தண்ணீர்ப் பந்தலில் "திருநாவுக்கரசு எனும் பேர், சந்தமுறை வரைந்ததனை எம் மருங்கும் தாம் கண்டார்" என்று சேக்கிழாரடிகள் குறிப்பது போல அக்கசாலைப் பிள்ளையார் கோயிலின் எம்மருங்கும் கல்வெட்டுகள்! முகப்புப் பக்கமா? பின் பக்கமா? இடப்பால் வலப்பால் பக்கங்களா? சுவரின் எழுதப் பகுதியா? எப்பகுதியும் உள்ளன கல்வெட்டுகள்! இவையெல்லாம் படிக்கப் பெற்றனவா? படியெடுக்கப் பெற்றனவா? பதிப்பிக்கப் பெற்றனவா? வரலாற்றுக்கு வளமான குறிப்புகள் இக்கல்வெட்டுகளில் இருக்கும் என்பது உறுதி.

கோயில் வாயிலில் நிற்கிறோம். இதோ... ஒரு கல் பளிச் சிடுகிறது. தெளிவாகப் படிக்குமாறு தீந்தமிழில் அமைந்த கல்வெட்டு; "மதுரோதைய நல்லூர் அக்கசாலை ஈசுவர முடையார் கோயில் தானத்திற்காக”... கல்வெட்டுத் தொடர்கிறது. கல்லெழுத்தைக் காணும் நாம் அக்கசாலை விநாயகர் என்று வழங்கும் பெயரைக் கேட்டுத் திகைக்கிறோம். கல்வெட்டில் ‘ஈசுவரர்’ என்று இருக்க 'விநாயகர், பெயரைக் கேட்டு, விநாயகரே வீற்றிருக்கவும் கண்டால் திகைப்படையாமல் இருக்க முடியுமா? பிள்ளையாரை ‘ஈசுவரர்” என்று வழங்கும் வழக்கம் இல்லையே!

கருவறைக்குள் எழுந்தருளியுள்ள பிள்ளையாரைக் குனிந்து வணங்கிய அளவில் அசையாமல் நிமிர்ந்து பார்க்கிறோம். நிலை வாயிலின் மேற்கல்லில் அக்கசாலை ஈசுவரமுடையார்’ என்னும் கல்லெழுத்து விளங்குகிறது; மீண்டும் திகைத்துப் பார்க்கிறோம் "திகைப்புடன் பார்க்கிறீர்களே! என்ன?” என்கிறார் அக்கோயில் அறக்காவலர் திரு. சண்முக சுந்தரனார்.

66

66

ன்

இ து முன்னே ஈசுவரன் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பின்னே பிள்ளையார் கோயிலாக மாறியிருக்க வேண்டும்” என்கிறோம். சண்முக சுந்தரனார் வியப்படைந்து, இதோ ஈசுவரர் இருக்கிறார்” என்று காட்டுகிறார். மூலவரை கருவறைக்கு வெளியே தள்ளி, மூத்த பிள்ளையாருக்கு இடந் தந்தவர்கள் மூலவரைக் கோயிலுக்கு வெளியேயே தள்ளி விடாமல், கருவறைக்கு முன்னே இடப்பக்கத்தில் முருகன் வள்ளி தேவயானை ஆகியோர் வரிசையிலேயாவது வைத்தார்களே என்று அமைதியடைகிறோம். அக்கசாலை ஈசுவரர் கோயில் என்பதன் உண்மை உணர்ந்த உணர்வால் அவ்வீசுவரர் பொன்னார் திருவருளை வியந்து வாழ்த்துகிறோம்.