உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

141

வாழ்கின்றனர்; அத்தெரு தொண்டை நாயனார் கோயிலின் வடக்கில் உள்ளது” என்று என்று மொழிகிறார். வள்ளிக் கிழங்கு எடுக்கப் போன ஒருவன் கையில், வயிரமும் மணியும் முத்தும் வளமாகக் கிடைத்தது போல மகிழ்கின்றோம்.

பல

-

அறிஞர் அ. இராகவன் அவர்கள் எழுதிய 'கோநகர் கொற்கை' என்னும் நூலைத் திரும்புகிறோம். (கொற்கை) அஃகசாலையில் பொன் வெள்ளி செம்புக் காசுகள் அச்சிடப்பட்டு வந்தன. இந்த அஃகசாலையில் உருவாக்கப் பட்ட காசுகள் பல என்னிடம் உள்ளன என்று உரைப்பதுடன், 91 காசுகளை இருபக்கமும் புலப்பட அச்சிட்டும் காட்டியுள்ள அருமையையும் காண்கிறோம். கைம்மேல், கிடைத்த கனியெனச் சான்றுண்மை கண்டு களிகூர்கின்றோம்!

66

தத்துநீர் வரைப்பிற் கொற்கை”,

“முத்துப்படுபரப்பிற் கொற்கை”,

“பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை”,

“நற்றேர் வழுதி கொற்கை”,

“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை”,

“பேரிசைக் கொற்கை”,

“கலிகெழுகொற்கை”,

எனச் சங்கச் சான்றோரொடும் கூடி நின்று பாடுகிறோம்.

கொற்கையில் ஒரு வன்னிமரத்தைக் காண்கிறோம். மதுரையில், புகழ் வாய்ந்த வன்னிமரம் உண்டு! வன்னியடி விநாயகர் ஆங்கு வீற்றிருக்கின்றார். வன்னியும் கிணறும் இலிங்கமும் வரவழைத்த திருவிளையாடலொடு அதனைத் தொடர்பு படுத்திக் கூறுகின்றனர். ஆனால் கொற்கை வன்னியின் பழைமையை அறுதியிட்டுரைக்க மரநூல் வல்லார்க்கே இயல்வதாம்.

கொற்கை வன்னி, சில ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சீர்மை, அதன் தோற்றத்திலேயே புலப்படுகிறது. நிலத்தொடு நிலமாய்ப் படிந்து நெடிமுடியண்ணலெனக் கிடந்து, நிமிர்ந்தோங்கிப் பசுமைக் கோலம் காட்டும் அதன் அருமை, பார்ப்பவர்