உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம்

16

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்! உள்ளீடற்ற கூடென அடி மரம் பட்டையொடு கிடப்பினும் அது வழங்கும் வளமைக் காட்சி காண்பாரை வயப்படுத்த வல்லதாம்!

"கொற்கை வன்னி, குரங்கணி ஆல் ஆழ்வார் திரு நகரிப்புளி” என வழங்கும் பழமொழியைக் கொற்கை அன்பர்கள் கூறுகின்றனர். மேலைத் தொடர் சார்ந்த குரங்கணியோ என நாம் நினைக்க இடம் வைக்காமல், "குரங்கணி கொற்கை சார்ந்ததோர் ஊர்” என்பதையும் சுட்டுகின்றனர்.

வன்னிமரச் சூழலைப் பார்க்கிறோம். அதன் அருகில் 6+6' அளவில் ஒரு செங்கல் தளம் தன் பழைமை காட்டிக் கொண்டு உள்ளது. அதன் பக்கத்தில் கொற்கைக் காசுகளில் காணப் படுகின்ற ‘காவடி தூக்கும் வானர' வடிவச் சிலை ஒன்றுள்ளது! அதுவும் பீடமின்றி நிலத்தின் மட்டத்திலேயே உள்ளது.

ர்

கொற்கை வன்னிக்கு நேர் வடக்கில்.7,8 மீட்டர் தொலைவில் ‘முழுமதி முக்குடை அச்சுதன்' அமர்ந்த கோலத்தில் அருமையாய்க் காட்சி வழங்குகிறார். இது காறும் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக் கெல்லாம் ஈடுதந்து, சிதையாத சீரிளமையுடன் செம்மாந்து வீற்றிருக்கும் அப் பெருமகனார் திருவுருவம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது! அப்படியே அவர் அழகை அள்ளிப் பழகுவார் போல அமைந்து நிற்கிறோம்! சிற்பத் திறனை வியப்பதா? அதன் பழைமையை வியப்பதா?

அறிவர் அமர்ந்துள்ள அழகுக்கோலம் நிலத்தின் மட்டத்தில் உள்ளது. அவர் அமர்ந்துள்ள பீடத்தை அகழ்ந்து தான் காண வேண்டும். அது, புதைந்து மண் மேடிட்டுப் போயுள்ளது நன்கு தெரிகின்றது! "1971 இல் அங்கு அகழ்வு செய்யப் பெற்றது என்பதையும், அசோகர் காலத்துப் பிராமி எழுத்து அமைந்த தாழி ஒன்று அகப்பட்டது என்பதையும் அன்பர்கள் உரைக்கின்றனர். கொற்கைப் பழமைக்கு இவ்வன்னியும் இம் முக்குடைச் செல்வரும் செவ்விய சான்றுகள் என்று நாம் நினைக்கும் போதே கொற்கைத் தமிழ்மன்றத் தலைவர் திரு. சிவசங்கு அவர்களும் செயலாளர் புலவர் திரு. ஐயாத்துரை அவர்களும் அச்சிடப்பெற்ற அறிக்கை ஒன்றை நம் கையில் சேர்க்கின்றனர்.

கொற்கை மண்ணின் கொழுமணம் அவர்கள் கொடுத்த அறிக்கையில் மிளிர்கின்றது. இலக்கியத்தாலும், வரலாற்றாலும், உலகவலம் வந்த பெருமக்கள் குறித்து வைத்த குறிப்புகளாலும்