உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

143

அறியப் பெறும் செய்திகளையெல்லாம் ஒருங்கு தொகுத்து உரைக்கும் அவ்வறிக்கையைக் கண்டு களிப்படைகிறோம். தொல் பொருள் ஆய்வாளர் செய்த அகழ்வு ஆய்வு, கொற்கையைச் சூழ்ந்துள்ள ஊர்கள் ஆகியவற்றையும் அறிகிறோம்.

கொற்கைத் துறையின் காவல் கடவுளராக விளங்கிய துறையப்பர் கோயில் கொண்டுள்ள அகரம்!

அறிவன் அமர்ந்து அருளுரை வழங்கிய

புரமாகிய அரியபுரம்!

அறிவன்

இத்தாலி நாட்டில் இருந்து சுற்றுலாக் கொண்டு வந்த மார்க்கபோலோ இறங்கிய பழைய காயல்!

சங்கப் பெண்பாற் புலவருள் ஒருவராகிய நப்பசலையார் தோன்றிய மாறோகம் ஆகிய மாறன் மங்கலம்! தொல்காப்பிய உரையாசிரியராகிய சேனாவரையர் விளங்கிய ஆற்றூர்!

ழங்காலக் காட்டரணமாக விளங்கிய இடைக்காடு, காவற்காடு, கோவன்காடு, குமரிக்காடு, தெக்காடு, கோட்டைக் காடு! ஏமமாக (பாதுகாப்பாக) அமைந்த ஏமராசன் கோயில்! ஊர்க் காவல் கடனேற்ற ஊர்காத்த பெருமாள் கோயில்! கோட்டைக் காவல் கடனேற்ற கோட்டாளமுத்துக் கோயில்! தென்னெல்லைக் கோட்டையாக விளங்கிய தென்பேரெயில் என்னும் தென்திருப்பேரை!

பாண்டியனின் சிறுபடைப் பிரிவின் தங்கலாக இருந்த சிறுத்தண்ட நல்லூர் என்னும் சிறுத்தொண்ட நல்லூர்!

அவன் பெரும்படைப்பிரிவின் தங்கலாக இருந்த பெரும் கடை, பெரும்படைச் சாத்தன் கோயில்! தவசக் கிடங்காக (கொட்டாரமாக) இருந்த கொட்டாரக்குறிச்சி!

குற்றவாளிகளைக் கழுவில் ஏற்றுதற்கு இடமாக இருந்த கழுவன் திரடு!

சங்கு - கிளிஞ்சில் - என்னும் பெயரே தன்பெயராய் எழிலுடன் விளங்கும் ஏரல்!

இத்தகு பெயரிய பெருமைமிக்க ஊர்களை நினைத்து வியப்படைகிறோம்!

கொற்கைப் பழமைக்கு இன்னும் சான்று வேண்டுமோ எனப் பூரிக்கிறோம்! அப்பூரிப்பின் இடையே எண்ணற்ற எண் ணங்கள் பொங்கி வழிகின்றன!