உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

உலகறிந்த கொற்கையை ஊரும் அறியாமல் செய்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை!

நேற்றை நிகழ்ச்சியை வாணம்' விட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் வையகத்தில், தொன்முது நாகரிகத் தொட்டிலைப் பற்றி நாம் சொல்லளவில் கூடவெளிப் படுத்தவில்லையே!

சுற்றுலாத்துறையும்

-

அகழ்வாய்வுத்துறையும் தொல் பொருள் ஆய்ஞரும் இருந்தும் இப்பழங் கொற்கையைப் புறக்கணித்துக் கொண்டிருக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலும் எப்படித்தான் எண்ணம் வருகின்றதோ?

6

அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னே இருக்கும் வளமான குளத்தில் படகுத்துறை யமைத்துச், செழியநங்கை கோயிலைச் சூழ நீராழி மண்டபம் அமைத்துச் சுற்றுல லா மையமாக்கிவிட்டால் முழுமதி எழிலுற விளங்கும் நாளில் அவ்வெள்ளி நீர் உருக்கின் மேல் ஓடம் விட்டால் போட்ட ம் தொகையையும் கூடப் போகவிடாமல் ஒன்றுக்கு இரண்டாய் அள்ளிக் கொண்டிருக்கலாமே!

பூம்புகார்ப் பெருமையைப் புதிய அமைப்பாய் உருவாக்கிப் புகழ் செய்த அரசு, பழங்கொற்கைப் பகுதியை எளிய முயற்சியால் பெரிய பயன் கொள்ளக் கருதவில்லையே!

அறிவனார் அழகுத் திருமேனியைக் கண்ணாரக் கண்டும் அகழ்வாய்வு மேற்கொண்டும், பழந்தடயங்கள் பற்பல எடுத்தும் தொல்பொருள் துறை அயர்ந்து போய் அமைந்து விட்டதே! பழங்கொற்கை புதுப் பொலிவு பெறுவதாக!

66

10. அணில் வரிக்காய்

அணிலின் முதுகில் அமைந்துள்ள கீற்றுகளைக் கண்டு அதன் அழகில் மயங்கிய ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை, ‘மூவரி அணில்” (மரபியல். 6) என்றார். சங்கச் சான்றோருள் ஒருவராய கடயலூர் உருத்திரங் கண்ணனார் அணிலின் வரிகளை அழகுற உவமை செய்து அகமிக மகிழ்ந்தார்.

“பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன

வரிப்புற அணில்’

என்பது அவர் வாக்கு.