உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

145

“இலவின் பசுங்காய் முற்றி வெடித்து அதன் வெண் பஞ்சு வெளிப்பட்டுத் தோன்றினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருக்கும் வரிகளைக் கொண்ட முதுகினையுடைய அணில்' என்பது எத்துணை அரிய உவமை!

66

அணில் அழகுறத் துள்ளி விளையாடும் ஒரு வீட்டின் முற்றத்தை. அணிலாடு முன்றில்' என்று பாராட்டிய சான்றோரை ‘அணிலாடு முன்றிலார்!, (குறுந்தொகை. 41) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது பழந்தமிழகம்.

அணிலைத் தொண்டராக்கி ஆர்வத்தால் உலவவிட்டார்

தொண்டர்.

66

'குரங்குகள் மலையைத் தூக்கக்

குளித்ததாம் புரண்டிட் டோடித்

தரங்கதீர் அடைக்க லுற்ற

சலமிலா அணிலம் போலேன்'

(தொண்டரடிப்பொடி ஆழ்வார். திருமாலை 27) என்பது

அவர் வாக்கு.

இராமர் திருவணை கட்டிய நாளில் குரங்கினம் மலை களைத் தூக்கி வந்து உதவிற்று. அணிலோ கடல் நீரில் குளித்துக் கரை மணலில் புரண்டு, ஒட்டிய மணலை அணையில் தட்டி ஆர்வம் செலுத்தியது என்ற அளவில் ஆழ்வார் அமைந்தார். அதனை மேலும் கற்பித்துக் கதை நீட்டியது பிற்கால உலகம்.

66

அணிலின் அருந்தொண்டுக்கு ஆளாகி உவந்த இராமர் தம் கைவிரல்கள் மூன்றால் முதுகில் வருட அதனால் அமைந்ததே ‘மூவரி” என்பது அக் கதை.

இயற்கை உவமை, இயல்பு நவிற்சி இவற்றையே உயிர்ப்பாகக் கொண்ட சங்கச் சான்றோருள் ஒருவராகிய பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு அணில் வரிகளை ஒரு காயின் மேலுள்ள வரிகளுக்கு ஒப்பிட்டு அதனை, அணில்வரிக் கொடுங்காய்' (புறம். 246) என்றார். இதற்குப் பழைய உரையாசிரியர் 'அணிலினது வரிபோலும் வரியையுடை வளைந்த வெள்ளரிக்காய்' என்று பொருள் கூறினார்.

ஆயர் முதுமகள் மாதரி தம் மகள் ஐயையைக் கண்ணகியார்க்கு அருந்துணையாக்கி, மடைக்கலங்களுடன் வழங்கிய அட்டிற் பொருள்களுள் வெள்வரிக் காயும் ஒன்றாகும். அதனைக் கூறும் அடிகள் வாக்கை, ‘வால்வரிக் கொடுங்காய்’