உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

என்று பாடங் கொண்டார் அரும்பத உரையாசிரியர். 'வாள் வரிக் கொடுங்காய்' என்று பாடங் கொண்டார் அடியார்க்கு நல்லார்.

அரும்பத உரையாசிரியர் 'வால்வரிக் கொடுங்காய்' வெள்ளரிக் காய்' எனப் பொருள் எழுதினார். அடியார்க்கு நல்லார் 'வாள்வரிக் 'வாள்வரிக் கொடுங்காய்' என்பதற்கு வளைந்த வரியையுடைய வெள்ளரிக்காய்' எனப்பொருள் எழுதி, “வால் வரிக்காய் எனப்பாடம் ஓதி வெள்வரிக்காய்" என்பாரும் உளர். ‘அணில்வரிக் கொடுங்காய்' எனப் புறத்தினும் காட்டினராகலின் கொடுங்காய் என்பது பெயர். 'வரி அடை என விளக்கம் எழுதினார்.

இவற்றுள் 'வாள்வரி' என்பதினும், 'வால்வரி' என்பதே பொருந்திய பாடமாகும். 'வால்' என்பது வெண்மை, தூய்மை முதலிய பல பொருள் தரும் ஒரு சொல். இங்கு வெண்மைப் பொருளில் வந்தது.

வெண் சங்க வண்ணனான பல தேவனை 'வால்வளை மேனிவாலியோன்' என்றும், மிக வெண்ணிறச் சங்கினை ‘வால் வெண்சங்கு' என்றும், பனையின் குருத் தோலையால் செய்யப் பெற்ற வெண்ணிறத் தடுக்கினை,

"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் கைவன் மகடூஉ கவின்பெறப் புனைந்த செய்வினைத்தவிசு”

என்றும் இளங்கோவடிகள் இயம்பினார். இறைவன் ‘நரை வெள்ளேற்றை’. ‘வால் வெள்ளேறு' (புறம்) என வண்ணித்துப் பாடினார் பெருந்தேவனார். கறையிலா அறிவின் இறைவனை, 'வாலறிவன்' என வழங்கினார் வள்ளுவனார். வாள் என்பதும் ஒளி என்னும் பொருள் உடையது. அது, வால் என்பது போல வெண்மை என்னும் பொருளை நேரே வழங்குவது அன்று. ஆகலின் வாள்வரிக் காய் என்பதிலும் வால்வரிக்காய் என்பதே பொருந்தும்.

வால் வரிக்காய் நாம் இந்நாளும் விரும்பித் தின்னும் 'வெள்ளரிக்காயே' ஆகும். இதனைத் தவறாக வெள்ளரிக்காய் என்றே பேச்சிலும் எழுத்திலும் பயில வழங்குகின்றோம். வெள்ளரி என்பதன் பொருள் வேறு; வெள்வரி என்பதன் பொருள் வேறு. முன்னதில் ‘அரி' யும் பின்னரில் 'வரியும்’ வரு மொழிகள். வெள்ளரிக்காயில் வரி உண்டேயன்றி அரி