உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

147

இரேகை) அமைந்ததில்லை. இனி, வெள்ளரி னி, வெள்ளரி என்பதற்கு, வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை (ஊன் துண்டுகளை) வெள்ளரி என்றார்' என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதுவதால் (மலைபடுகடாம். 465) 'வெள்வரி' என்பதே பொருந்தும் என்பதுணரலாம்.

பிழைபட வழங்கும் 'வெள்ளரிக்காய்' என்பதை, முக் கூட்டுச் சொல்லாகக் கொண்டு இரட்டுற மொழிந்தார் ஒருவர். காய்கறி விற்கும் ஒருத்திக்குக் காதலன் ஒருவன் இருந்தான். அவன் அவளை மிகக் காதலித்தான். ஆனால் அவள் ஒப்புதல் எளிதில் வாய்க்கவில்லை. அதனால் அவள் வைத்திருக்கும் மிளகாய், சுரைக்காய், வெள்ளரிக்காய்,

அவரைக்காய்

என்பவற்றைக் கொண்டு உரையாடத் தொடங்கினான்.

“உள்ள மிளகாயா? ஒருபேச் சுரைக்காயா? வெள்ளரிக் காயா? விரும்பு மவரைக் காயா?”

'உள்ள மிளகாயா? என்னும் வினாவுடன் ‘உள்ளம் இள காயா?' எனத் தன் விருப்பைத் தெரிவித்தான். ‘ஒரு பேச் சுரைக்காயா?' (பேய்ச்சுரை, சுரையுள் ஒருவகை) என மீண்டும் வினாவி, 'ஒருபேச்சு உரைக்காயா?' எனத் தன் வேட்கையைத் தொடுத்தான். அதற்குச் சிறிதும் அசையாது கற்றூண் போல் இருந்தமையால் "வெள்ளரிக் காயா?" என்றான். வெள் அரி (நரசிங்கம்)க்கு ஆய் (தாய்) தூண் தானே! அதற்கும் அவள் பதில் உரைக்காமையால், 'விரும்புமவரைக் காயாதே' என மன்றாடினான். வெள்வரிக்காய் வெள்ளரிக்காயென மாற்ற முற்றமையால் மாற்றியமையால் அமைந்த சொற்சிலம்பம் இஃதாகும்.

“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை”

என்று அழுத்தமாக முழுமுதல் இலக்கண ஆசான் மொழிந்தும் உலக வழக்கன்றிச் செய்யுள் வழக்கினும் மரபு நிலை திரிதல் ஆயது. இதனைக் கருதிக் கடனாற்றுவது மொழி நலம் பேணுவார் முழுக்கடனாம்.

11. வலியா வழி வலித்தல்

வரம்பு, வரப்பு; பரம்பு, பரப்பு; இவை 'வலித்தல் விகாரம்’ எனப்படும். இவ்வாறு வருவனவற்றை “வலிக்கும் வழி வலித்தல்” என்பார் தொல்காப்பியர்.

-