உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

சிலம்பு, சிலப்பு; சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம். இது ‘வலிக்கும் வழி வலித்தல்’ ஆகுமா!

‘சிலம்பு’ சிலப்பதிகாரத்தில் மிகப்பல இடங்களில் ஆளப் படுகின்றது; அடை தந்தும் ஆளப் படுகின்றது; ஆனால் 'சிலப்பதிகாரம்' எனப் பெயர் சுட்டுமிடங்களிலன்றி எவ்விடத்தும் சிலம்பு, 'சிலப்பு' என வந்ததில்லை. வேறு இடங்களிலும், வழக்கு களிலும் ல்லை. ஆதலால், இது வலிக்கும் வழி வலித்தல் அன்று; 'வலியா வழி வலித்தல்' எனப் புது இலக்கணம் தான் சொல்ல வேண்டும்!

என

'சிலம்பதிகாரம்' என்று பெயர் சூட்டாமல் 'சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளார் சூட்டியது ஏன்? தக்க காரணம் இல்லாமல் முகத்திலே முத்திரை வைத்தது போலப் பெயர் வைப்பாரா? மெல்லொற்றை வல்லொற்றாக்குவாரா? ஆக்கினால் தக்க காரணம் இருத்தல் வேண்டும்! ஏனெனில், தகவார்ந்த இலக்கியப் படைப்பாளர் அவர்!

'சிலம்பு' என்பது மெல்லொலியது; மெல்லியலார் அணிகலம் ஆவது; ஒலிக்கும் கம்பாட்டமும், ஒலிமிக்க மலையும், ஒலிதரும் அணிகலமும் சிலம்பு எனப்படுகின்றன. 'சிலம்பாயி' 'சிலம்பாறு' ‘சிலம்பி' என்பனவும் பெயரீடுகளே; இவையும் ஒலிவழிப் பெயர்களே.

ரு

'சிலம்புகழி நோன்பு' என்பது பழங்காலச் சடங்குகளுள் ஒன்று; திருமண நிகழ்ச்சிக்கு முன்னர் மணமகளின் காலில் இருந்து சிலம்பைக் கழற்றும் சடங்கே அது. அவள் திரு மணமானவள், திருமணமாகாதவள் என்பதை எளிதில் அறியக் காட்டும் அணிகலம் சிலம்பு. கண்ணகியார் சிலம்பு காலில் இல்லாமல் பொதிவாயில் (பையில்) இருந்தது அதனால் தான்! மெல்லியதும், மெல்லியலார் அணிவதும் ஆகிய அச்சிலம்பு செய்த செய்கை என்ன? சிலம்புச் செய்தியை ஒரு 'பருந்துப் பார்வை' பார்த்தால் புரியுமே!

சிலம்பு கவர்ந்த கள்வனெனக் கோவலனைக் கொன்றது -

சிலம்பு!

-

கள்வன் அல்லன் கோவலன்; காவலனே தவறுடையன் என்று கண்ணகியார் வழக்குரைத்தமையால் அச்சிலம்பின் காரணத்தால் - பாண்டியன் உயிர் துறந்தான்.

66

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்”லென்று

பாண்டிமாதேவியும் உடன் உயிர் துறந்தார்.