உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம்

16

3. பன்னிலை ஆராய்ச்சி

1. இலக்கியம்

இலக்கு + இயம்=இலக்கியம் ; இலக்கினை இயம்புவது எதுவோ அதுவே இலக்கியம்; இலக்கு என்பது குறிக்கோள். கூர்மையாய் நோக்கிக் குறி தவறாமல் அம்பு ஏவுதற்கு இலைக் குறியை முன்னோர் கொண்டனர் : இலை, ‘இலக்கு' ஆயிற்று; இலக்கு' குறிப்பிட்ட இ -மும் ஆயிற்று; அந்த இலக்கு, இந்த இலக்கு (லெக்கு என்பது வழக்கு) என நாட்டுப் புறங்களில் இன்றும் கேட்கக் கூடியதே.

இலக்கு அணம் இலக்கணம்; இலக்கினை அண்ணுவதும் (நெருங்குவதும்) அணுவுவதும் (தழுவுவதும்) எதுவோ அதுவே லக்கணம் ஆகும். இலக்கு, இலக்கணத்திற்கும் வேண்டும்; இலக்கியத்திற்கும் வேண்டும்! இலக்கு இல்லாதது பயனில கூறலாய்ப் பழிக்கிடனாகி முடியும்.

இலக்கு இல்லா நூல், ‘அன்பு இல்லாத உடல் போன்றது; இரசம்; பூசப்பெறாத கண்ணாடி போன்றது; ஒளியற்ற கண் போன்றது; மணமற்ற மலர் போன்றது.'

நூல்கள் இலக்கினை இயம்புகின்றனவா?

66

“அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” என்ப ராகலின் இலக்கினையுடையதே நூலாம். “அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும், ஊழ்வினை வந்து உருத்து ஊட்டுவதும்” ஆகிய முப்பொருளை வலியுறுத்துமாறு எழுந்த நூல் சிலப்பதிகாரம். பௌத்த சமய மேம்பாட்டைப் பகர எழுந்தது மணிமேகலை; ஆசை பற்றி அறையலுற்றேன்” என இராமன் தெய்வக் காதற் பேற்றை எய்துவதே நோக்கமாகக் கொண்டு எழுந்தது, இராமாயணம்; மற்றவையும் இத்தகைய இலக்குடையவையே.

66

இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் தொடர்புண்டோ? உண்டு; இரண்டும் இலக்கு உடையவை; ஆதலால், தொடர்பு