உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

151

உடைய யவை. எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தில் இருந்து எடுக்கப் படுவது இலக்கணம்.

இலக்கணம் ஆற்றின் கரை; இலக்கியம் காட்டாற்று வெள்ளம்; இலக்கணம் வரிச் சட்டகம்; இலக்கியம் வண்ண ஓவியம்; இலக்கணம் கூரை ஓட்டின்மேல் போடப்படும் காரை அமுக்கு; இலக்கியம் ஓடு;

இ இலக்கியம் எப்படித் தோன்றியது? இரும்பில் இருந்த ஒளி, தீயொடு கூடும் பொழுது சுடர் விட்டு வெளிக் கிளம்புவது போல, பாலில் இருந்த வெண்ணெய் கடைந்த போது திரண்டு எழுவது போல உலகியலில் இருந்து உணர்வுடையார் அறிவுத் திறனால் இலக்கியம் தோன்றியது.

ம்

இலக்கணத்தைத் தந்தது இலக்கியம்; அந்த இலக்கணம் பல இலக்கியங்களைப் படைத்துத் தந்தது; அவ்விலக்கணத்தின் படைப்பாகிய இலக்கியங்களும் இலக்கணங்களைப் புதுப் பிக்கவே கருவியாயின; இவ்வாறு ஒன்றால் ஒன்று வளம் பறுகின்றன. நீர் பனிக் கட்டியாய் பனிக்கட்டி நீராய் மாற வில்லையா? நிலையாலும், வடிவாலும், வேறுபட்டாலும் ஒரு பொதுத் தன்மை உண்டன்றோ!

உலக வழக்கு செய்யுள் வழக்கு இரண்டையும் கண்டு வெளிப்பட்டது முழுமுதல் இலக்கண நூலாம் தொல்காப்பியம். தண்டியலங்காரம் முதலிய அணி இலக்கணம் விரிக்கும் நூல்கள், காப்பிய இலக்கணம் இன்னதெனப் பகர்கின்றன. இக்காப்பிய இலக்கணம் எப்படி அவற்றுக்குக் கிடைத்தது? சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய காப்பியங்கள் வழங்கிய காடையே அக்காப்பிய இலக்கண அமைதி. மகளாக இருந்தவள் ஒருநாள் மகளைப் பெறும் தாயாகவும் மாறுகிறாள் இல்லையா? காப்பியமே காப்பிய இலக்கணம் தந்த கதை இது.

புலமையாளன் பெற்றெடுத்த மகவு, இலக்கியம் : 'புலவன் கவிதை இயற்றுகிறான்' என்பர். ஆனால் அவன் கவிதையைப் பெறுகிறான்; ஈனுகிறான்; இதனாலேயே புலவனை நான் முகனுக்கு ஒப்பிட்டார் ஒரு புலவர்; ‘நான் முகன் படைக்கும் உடல் மாயும் வெற்றுடல்; புலவன் (நாவலன்) படைக்கும் பாவுடல் அழியாப் புகழுடல். ஆதலால் நான்முகன் புலவனுக்கு ஒப்பாகான்’ என்றார் அவர்.

புலவன் கருத்து வளங்களால் கருக் கொள்கிறான்; சூழலின் உந்துதலால் சூல்உளைவு அடைகிறான்; கவிதை மகவைப்