உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம்

16

பெற்றுக் களிப்புடன் உலவ விடுகின்றான். அம்மகவும் சீரும் சிறப்புமிக்கு உலாவரும் போது, “ஈன்ற பொழுதில் பெரி துவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் போல் மகிழ்கிறான். அதுவே அவனுக்குப் பேரின்பப் பெரு வாழ்வாகின்றது.

-

கவிஞன் அறிஞன்; உணர்வாளன்; அவன் அறிய வேண்டுமவற்றை அறிகிறான்; எதிர்காலத்தில் எண்ண வேண்டும் என்பதை நிகழ்காலத்தில் உணர்ந்து பாடுகின்றான். அவற்றை அப்படி அப்படியே ‘பஞ்சாங்கம்' போல், கடைச் சரக்குப் பட்டியல் போல், கால அட்டவணை போல் கூறாமல், உணர்ச்சி பொங்க வெளியிடுகிறான். அவ்வெளியீட்டு முறையால், உலகை வயப்படுத்தித் தனக்குத் தாளம் போட வைக்கிறான்.

66

"கள்வார் இல்லை; காப்பார் இல்லை; கொள்வார் இல்லை; கொடுப்பார் இல்லை; வண்மை இல்லை; வறுமை ல்லை; திண்மை இல்லை; செருநர் இல்லை; உண்மை இல்லை; பொய்ம்மை இல்லை” என்பன வெல்லாம் கம்பன் காலத்து இல்லாதவையா? இராமன் காலத்தோ தயரதன் காலத்தோ இல்லாதவையா? அவன், இவை ல்லாத உலகை எதிர் நோக்குகின்றான்; வரவேற்கின்றான்; அவன் உள்ளகம் அது;

66

-

6

வெள்ளமெனப் பொழிவாய்; கவி வெள்ளமெனப் பொழிவாய்; எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்” என்று புலவன் வரம் வேண்டிக் கிடக்கிறான்; “என்னைப் பாடு, என்னைப் பாடு என்று உலகியற் பொருள்களும் நிகழ்ச்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அவனைப் பாட ஏவுகின்றன. அவன் வாய் கவி பொழிகின்றது. அப்பொழுது அவன் கவிமுகில் ஆகிறான்; 'காளமேகம்' ஆகின்றான். “மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம்தான் ஆகாதோ?" என்று கேட்பவனாகவும் ஆகின்றான்.

கவிஞன் வாக்கில் இருந்து வரும் சொல் வெற்றுச் சொல் அன்று; வறட்டுச் சொல் அன்று; அஃது அடையில் இருந்து ஒழுகும் தேன்; குற்றால அருவி; சந்தனக் கலவை! இதனால் தான் பாண்டியன் வரகுணன்,

66

“கன்னல் பாகில் கோல் தேனில்

கனியில் கனிந்த கவி பாட

அன்னத் தொகுதி வயல் கருவை

ஆண்டான் என்னை ஆண்டதுவே”