உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

153

என்று பாடினான். “பொன்னின் சோதி, போதினின் நாற்றம் பொலிவே போல் தென்னுண் தேனின் செஞ்சொற் சுவியின்பம்” என்றான் கம்பன். "சிந்தைக்கினிய செவிக்கினிய" சவிக்கினிய" என்றது திருவள்ளுவ மாலை.

கவிஞன் சொல்லாட்சி தனிச் சிறப்புடையது. எந்த இடத்தில் எந்தச் சொல்லைப் போட வேண்டுமோ அந்தச் சொல்லை அந்த இடத்தில் போடுகிறான்; பொதிந்து வைக்கிறான்; பொலிவுறுத்துகிறான். அச்சொல்லைப் பெயர்த்து அடுத்ததோர் சொல்லை வைத்தால் ‘அழகு' குன்றிப் போகும் என்பதை மிக எளிமையாகத் தெரிய வைத்து விடுகிறான்! நாம் பழகிய ஒருவர்; பல்கால் பேசி மகிழ்ந்த ஒருவர்; அவ்வளவே அவரைப் பற்றி நாம் அறிந்தவை; ஆனால், அவர் அறிவுத் திறத்தால் பெரும் பதவிக்குரியவராக ஆக்கப்படும் போது, நாம் நம்மையறியாமல் வியப்படைகிறோம். ‘நாம் அறிந்த இவரா? நாம் பேசிப் பழகிய இவரா? இவ்வளவு பெரியவரா?' என்று எத்தனை எண்ணுகிறோம். அப்படி எண்ண வைக்கின்றது கவிஞன் கையாளும் சொல்! நாம் அறிந்த சொற்களே; பயன்படுத்திய சொற்களே; ஆனால், அவன் வாக்கில் இருந்து வெளிப்படும் போது அவை அத்தனை உயர்வுக்கு உரியன ஆகின்றன.

கவிப் புலவனுக்கு இத்தன்மை எப்படி வாய்த்தது? அவன் கண்கள் தனித்தன்மை வாய்ந்தவை; ஊடுருவிப் பார்க்க முடியாத வற்றையும் ஊடுருவிப் பார்க்க வல்லவை! அவன் காதுகளும், மூக்கும் மெய்யும் மனமும் பிறவும் தனித் தன்மை வாய்ந்தவை; அவன் காக்கை குருவி எங்கள் சாதி; கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்னக் களிப்படைவான்; தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு நோக்குவான்; மல்லிகை சொல்லும் கதை கேட்பான்; மாமரம் கூறும் கதை கேட்பான்; உலகவர் கண்ணில் நீர் வழிந்தால் தன் கண்ணில் உதிரம் கொட்ட நிற்பான்; தன்னை மறந்த இலயம் தன்னிலே ஒன்றி விடுவான். அவன் குழந்தை; அறிஞன்; அமைச்சன்; தாய் தந்தை - இப்படிப் பல நிலைகளில் படிந்து படிந்து நிற்பான்; நொடிக்கு நொடி மாறி நின்று நடிக்கத் தேர்ந்தவன் அவன். கோவலனாக - கண்ணகியாக மாதவியாக கௌந்தியாக பாண்டியனாக பிறராக நிற்பவர் ஒரே ஓர் இளங்கோ! இந்த அழகிய ‘பச்சோந்தி' நடிப்புத்தான் நம்மை ஆட்படுத்தி மீளா அடிமை ஆக்கி வைக்கின்றது. அவருக்கு வழிபாடு செய்யும் 'தொண்டரடிப் பொடியார்’ ஆக்கி வைக்கின்றது.

-

-

-

-