உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

154

இளங்குமரனார் தமிழ் வளம் 16

இலக்கியம் எப்படி உருவாகின்றது? சூழ்நிலை, புலவன் உள்ளத்தில் தைக்கின்றது. இன்பமா? துன்பமா? எதுவானால் என்ன? அவன் உணர்வைத் தூண்ட வேண்டும்; ஊதினால் ஒரு நூறு அடி உயரம் பறக்கும் பஞ்சு அவன் உணர்வு நெஞ்சம். எந்த மெல்லிய நிகழ்ச்சியும் அவனை உந்தித் தள்ளி உயரப் பறக்க விட்டு விடும்; உடனே அவன் கோடை மழையாய்க் கொட்டி விடுவான்.

பெருஞ்சித்திரனாரை வறுமை அசைத்தது; வாயோ இசைத்தது; வறுமையிலே பூத்த அப்பூக்கள் வற்றா வளஞ் சுரக்கும் இலக்கியமாய்ப் புறநானூற்றில் பொலிகின்றன.

முறை கேடாக அரசன் வரி வாங்குகிறான். ஆள்வோர் மக்களை வாட்டுகின்றனர். புலவர் உள்ளம் புழுங்குகின்றது; புறப்படுகின்றது ஒரு பாட்டு. “காய் நெல்லறுத்து' என்னும் பாட்டைப் பிசிராந்தையார் பாடியது இச்சூழலிலே தான்.

'தண்ணீர் தா'வென்று கேட்கிறான் கணைக்காலன்; ஏவலன் இழிவாக எண்ணுகிறான். “குழவி இறப்பினும்” என்னும் பாட்டுத் தவழ்கிறது.

சிலப்பதிகாரக் கதையைக் கூறிய சாத்தனார்; 'அடிகள் நீரே அருளுக' என்கிறார். இளங்கோ கலைக்கோயில் எழுப்பு கிறார்.

'நாட்டுப் பாடல் அனுப்புக' என விளம்பரப் படுத்துகிறார் பாரதியார். வந்து சேரவில்லை புலவர்களிடத்தில் இருந்து; புதிது படைப்பேன் எனத் தொடங்கிச் “செந்தமிழ் நாடெனும் போதினிலே”; “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்”, "மன்னுமிமய மலை எங்கள் மலையே” இவ்வாறு பாடிக்

குவிக்கிறார். பாரதியார்.

-

புலவன் சூழலால் கவிதை வெறிக்கு ஆட்படுகிறான்; அவன் கால், மண்ணில் நின்றாலும் விண்ணில் பறக்கிறான்; அழகு அழகுச் சொற்களை எழில் பெறப் பொழிகிறான்; பொழிந்து முடித்ததும் நம்மைப் போல எளிய மனிதனாகி விடுகின்றான் அவன். பாடிய பாட்டையே அவன், 'வியப்போடு நோக்கும் குழந்தை போல' நோக்குகிறான். அவன் இரக்கத்திற்கு உரியவன்.

உலகைக் கடந்து நிற்கும் அவன், உலகவர் நோக்கில் கிறுக்கன்; வாழத் தெரியாதவன்; ஆனால் அவன் அவற்றைப்