உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

ஒவ்

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

என்ன சொல்வது? என்ன கேட்பது? வெட்கம் கொள்வான் - திரும்புவான், மீண்டும் போவான். நெருங்குவான்! காணாமல் இருக்க முடியாத அன்பு சில நாட்களுள் பெற்றான். ஒருவரை ஒருவர் அரைகுறையாகப் பார்க்கும் - பார்த்துச் சிறுமுறுவல் செய்யும் - அளவுக்கு வளர்ந்தனர். ஒவ்வொருவர் உள்ளத்தும் வ்வொருவர் மாறிமாறிப் புகுந்து கொண்டனர். இதனை அறிந்த தோழிக்கு “ஒப்புமை, ஒப்புமை, இணையிலா ஒப்புமை' என்னும் மகிழ்ச்சி உண்டாயது. ஆனால் கால ஓட்டத்தில் தண்ணந்துறைவன் மறக்கத் தொடங்கி விட்டான் தலைவியை! அன்புப் பிணைப்பால் அடிக்கடி வந்து பழகிச் சென்றவன் அறவே மறந்து விட்டான் என்றால் அவனே தஞ்சம் என இருக்கும், செல்விக்கு எப்படி இருக்கும்?

,,

பொன் போன்ற உடல் பொலிவு குன்றிவிட்டது. கண்ணொளி மயங்கிவிட்டது. கால்கள் நடக்கத் தடுமாறின ஆடை அணிகலங்களைப் பற்றி அவள் அக்கறை காட்டவே இல்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டே நொடி நொடியாக நாள்களை ஓட்டிவந்தாள். இன்னும் சில நாள்கள் வேண்டு மானாலும்...ஐயோ! கொடைச் செல்வியின் கொடிய நிலைமையை நினைத்து நினைத்து உயிர்த்தோழி உருகிப் போய்விட்டாள். ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டனர். ஆனால் ஒருவரினும் ஒருவர் மெலிந்தனர். எழில் உருவங்கள் ஏக்கப் பிழம்புகளாய் ஊசலாடின.

L

என்ன காரணமோ தெரியவில்லை. அறிவு வந்து விட்டதா? பொய்யாகத்தான் நடிக்கிறானா? கொடைச் செல்வியும் தோழியும் உரையாடிக் கொண்டு இருக்கும் சோலை வழியே வருகின்றான். எவன்? அவன்தான்! தண்ணந்துறைவன். தலைவி பார்த்துக் கொண்டாள். பார்த்தாலும் தான் தொடங்கிய உரையாடலை விடவில்லை.

தோழி : அம்மா! நாம் முன் எவ்வளவு நலத்துடன் இருந்தோம்.

தலைவி : அடி! அதைப் பற்றி இ இப்பொழுது ஏன் பேசுகின்றாய்?

தோழி : வேறொன்றும் இல்லை. தங்கள் மெலிவும் கவலையும் என்னைத் துன்புறுத்துகின்றன. உங்களைப் பழைய நிலைமையில் பார்க்க...

தலைவி : அடி! என்ன சொன்னாய்! நம் பழைய அழகை மீண்டும் பெறுவது நம் கையிலா இருக்கிறது?