உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

தோழி : நாம் நினைத்தால் முடியாதா?

தலைவி : நினைத்தால் முடியுமா? எப்படி?

161

தோழி : நாம் கொடுத்த அழகை மீண்டும் நமக்குத்தர வேண்டுவோம்.

தலைவி : யாரிடம்? படைத்தவனிடமா?

தோழி: ஐயையோ! நம் அழகைக் கவர்ந்து போன தண்ணந் துறைவனிடம்.

தலைவி : என்ன சொல்லினை? இன்னொரு முறை சொல்லாதே நாமே விரும்பித் தந்த அழகை மீண்டும் நாம் கேட்டு வாங்கிக் கொள்ளவா?

தோழி : அதில் என்ன குற்றம்? நம் பொருளை நாம் பெற்றுக் கொண்டால் என்ன? அவரை வளைத்துப் பிடித்தாவது காண்டு போன வனப்பைப் பெற்றேயாக வேண்டும். ல்லையேல்..

தலைவி : இல்லையேல்!

தோழி : இல்லையேல்..

தலைவி : ஏனடி இழுக்கிறாய்? என் உயிர் போய்விடும் என்றா? இவ்வளவு தானே!

தோழி : அதைச் சொல்லாதீர்கள்!

தலைவி : கொடுத்த ஒன்றை மீண்டும் வாங்கித்தான் ஆக வேண்டும் என்னும் நிலைமை ஏற்பட்டால் அக்கொடுமைக்குப் பதில் இனிய உயிரைக் கூடத் தந்து விடலாமே! உயிரென்ன உயிர்? என்றைக்காவது இவ்வுடலை விட்டுப் பிரிந்து போவது தானே! வேண்டுமானால் சிறிது முன்னாகப் போய்விடும். அவ்வளவுதான். அதற்காக நிலையான புகழை விடுத்துத் தீரா வசையைப் பெறுவதா? சீ! சீ! இதுவென்ன பேச்சு!

தோழி : பெயர் தான் தண்ணந்துறைவன்.. செயல்?

தலைவி : பழிக்காதே. நீயே சொல்லியிருக்கிறாய். நறுமண முள்ள அடும்பு மலரை மிதித்துச் சிதைத்து - நாற்றம் உடைய மீனைத் தேடிப் பிடித்துத் தின்னும் துறை இவர் நாட்டிலே உண்டு என்று.

தோழி : ஆமாம்!