உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் 16

தலைவி : அந்தத் துறைக்கு உரியவர் நம் தலைவர் தானே! தோழி : ஆமாம்!

தலைவி : துறை நிகழ்ச்சிகளை அவர் நாள் தவறாமல் கண்டிருக்க முடியும் அல்லவா!

தோழி : ஆமாம்!

தலைவி ! அப்படியானால் நம் தலைவர் உள்ளத்து அடும்பைச் சிதைத்து, தேனை அழித்து, மீனை அருந்தும் நாரையின் தன்மை எளிதில் இடம் பெற்றிருக்கத் தவறாது அல்லவா!

தோழி : ஐயையோ! நான் அவர் நாட்டின் வளத்தை அல்லவா கூறினேன். என்னிடம் அதையே சாட்சியாகக் கூறி விட்டீர்களே! நல்ல திறமை.

தலைவி : பாராட்டு வேண்டாமடி பைங்கிளி! தடந்தாள் நாரை அடும்பை மிதித்து மீனைப் பிடிக்கும்போது, அடும்பு தாங்கிக் கொண்டுதானே இருக்கும்?

தோழி : ஆமாம்! அதற்கென்ன ஐயம்! வளைந்தாலும் ஒடிந்தாலும் தாங்கவே செய்யும்!

தலைவி : அதே நிலைமைதான் நமக்கும். தலைவன் பிரிவைப் பொறுப்போம்; மெலிவோம்; மடிவோம்.

தோழி : அதோ... அதோ...

(தண்ணந்தறைவன் அவர்களை அடுத்து வருகின்றான்)

தலைவி : பார்த்துக் கொண்டேன். அதற்காக, சாவதற்கு அஞ்சி நாம் கொடுத்த அழகை மீண்டும் தருக என வேண்டேன். அக்கொடுமையை என்னால் செய்ய இயலாது.

தோழி : பாவம்! உங்கள் பிடிவாதம் கொடியது அம்மா! தலைவி : என் வழிக்கு வராதே. உன் பரிவுக்கு நன்றி. அஞ்சும் கேழைகளிடம் வைத்துக்கொள் உன் பேச்சை.

இந்த முடிவுரையைக் கேள்வியுற்ற தண்ணந்துறைவன் வேலியை முரித்துச் சோலைக்குள் தாவினான். சாவு என்றால் எளிதா? அதற்குக் காரணம் அவனே என்றால்? பேச முடிய வில்லை அவனால். பேசவும் காத்துக் கொண்டிருக்கவில்லை அவள். அவன் திருந்த வேண்டும் என்பதற்காகத் தானே அவன்