உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

163

கேட்கும் விதமாகக் கூறினாள். வெட்கிக் தலை குனிந்தான் தண்ணந்துறைவன். கொடைச் செல்வியின் சினம் பறந்து ஓடியது. இந்தக் காட்சியை வர்ணிக்கின்றார் குறுந்தொகை பாடிய நறுந்தமிழ்ப் புலவர் ஒருவர் :

66

“அடும்பவிழ் அணிமலர் சிதைஇ மீன் அருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்

தண்ணந் துறைவற் றொடுத்து நம்நலம் கொள்வாம் என்றீ தோழி! கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும்

இன்னாதோ நம்இன்னுயிர் இழப்பே.

தண்ணந்துறைவன் நாட்டின் இயல்பைக் கூறுவது போலாக, அவன் இயல்பை எடுத்துக் காட்டும் அழகே அழகு! நினைத்த இடத்திற்கு எளிதிலே சென்று மீளும் வாய்ப்புப் பெற்ற நெடுங்கால் நாரையைத் தலைவன் ஆகவும், வனப்பும் இயற்கைப் பண்பும் உடைய தலைவியை அடும்பு மலராகவும், கண்ணில் மயல்காட்டிச் செல்லும் புலால் நாறும் மீனைப் பொது மகளாகவும் கற்பனை செய்து கொண்ட பாவலரின் புலமையே புலமை!

'நம் நலம்' என்னும் சொல்லிலோ தலைவி தோழி ஆகிய இருவரும் மெலிவுற்றிருக்கின்றனர் என்றும், தலைவன் வந்து சேர்ந்தால் தலைவி நலம் பெறுவாள் என்றும், தலைவி நலம் பெற்றால் தோழி நலம் உற்றாள் என்றும், தலைவி இழப்பின் தோழியும் உடன் உயிர் இழப்பள் என்றும் நுண்ணிதில் உணர்த்தும் கருத்தாழம் பேருவகை பயப்பதாம்.

உயிர்

இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே' என்னும் மணியன்ன சொற்களைப் பன்முறை சொல்லிச் சொல்லிப் பார்த்தால் பொருளும், அமைப்பின் மாண்பும் அறியவரும். உயிரின் அருமை தோன்ற 'இன்னுயிர்' என்றாரேனும் கொடுத்ததைக் கேட்டு வாங்கி உயிர் வாழ்வதிலும் உயிர் விடுவது இன்னாதோ? என்னும் வினாவினால் தாம் கொண்ட அறத்தை வற்புறுத்துகின்றார் புலவர். இவ்வுயர் பாடலைப் பாடிய புலவர் பெருமகனார் சாத்தனார் என்னும் பெயராளர்!