உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம்

4. கங்குல் நங்கை

16

ஒருவன் செய்த குற்றம் அவனோடு ஒழியாது அவன் வழியினரையும் பற்றிப் பிடித்துப் படுபாடு படுத்தவல்லது. பெண்கொலை புரிந்தான் நன்னன். ஆற்றில் வந்த மாங்கனியை அறியாமல் உண்ட கன்னி ஒருத்தியைக் களவு செய்து தின்றாள் என்று காரணம் காட்டிக் கொலை புரிந்தான் கயவன் நன்னன். காவலன் என்றாலும் கண்ணோட்டம் இல்லாத அவன், அரண்மனையைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் விரும்பினர் அல்லர் பைந்தமிழ்ப் பாவலர். அவனை மட்டும் தானோ பார்க்க விரும்பினார் அல்லர்? அவன் வழிவழி வந்தோரையும் பார்க்க விரும்பினார் அல்லர்; பாராட்ட விழைந்தார் அல்லர்.

6

இளவிச்சிக்கோவும் இளங்கண்டீரக் கோவும் இணைந்து ருக்கின்றனர். ஆங்கே செல்கின்றார் பெருந்தலைச் சாத்தனார். இளங்கண்டீரக் கோவைத் தழுவித் தம் அன்பையெல்லாம் ஒருசேரக் காட்டினார் சாத்தனார். விச்சிக் கோவைத் தழுவினார் அல்லர். நாணமாக இருந்தது விச்சிக் கோவுக்கு. “என்னைத் தழுவாமை ஏன்?” என்று புலவரை வினாவினான். புலவர் தம் எண்ணத்தை மறைத்தாரா? மழுப்பினாரா? இலர்.

-

"நீயும் தழுவத் தக்கவன் தான்! ஆயினும் பெண் கொலை புரிந்த நன்னன் வழியில் வந்தவன். ஆதலால் புலவர் பாடுதல் ஒழிந்தனர்; நானும் தழுவ விரும்பிலேன்” என்றார். எவன் செய்த பழி எவனைச் சேர்கின்றது! இவ்வாறே ஓராண் செய்த பழி ஆணினத்தையே பழிக்கு ஆளாக்குகிறது; ஒரு பெண் செய்த பழி பெண் இனத்தையே சுற்றி வளைத்து வாட்டுகிறது. நல்லவற்றை அவ்வவ்வினத்துடன் இணைப்பதைப் பார்க்கிலும் அல்லவற்றை ணைப்பதிலே உலகுக்குப் பேரார்வம் உண்டு. அதற்கென வரிந்து கட்டித் திரிவதும் உண்டு.

ஆணினத்திற்கு மாசு ஏற்படுத்துவதற்குக் கூட உலகம் மயங்குவதும் தயங்குவதும் உண்டு. பெண் இனத்திற்கு என்றால் பெரும் பாய்ச்சலுடன் சென்று குற்றம் கூறத் தயங்குவது இல்லை. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உலகம் பெண்மையினிடம் தண்மையை எதிர் பார்க்கின்றது. அத் தண்மைக்கும், தாய்மைக்கும், தூய்மைக்கும் எதிராக வெம்மையும், பேய்மையும், நோய்மையும் எழுமாயின் துடித்து எழுகின்றது. பாம்புப் பெட்டிக்குள்ளோ புற்றுக்குள்ளோ பாம்பு இருப்பது இயற்கையானது. ஆனால் சாந்துப் பெட்டிக்குள் பாம்பு