உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

165

இருக்கக் கண்டால்? சாந்து எடுக்கச் சென்று திறந்தவன் பாம்பு இருக்கக் கண்டால்? கொடுமையான நிகழ்ச்சி இது. நன்மையை எதிர்பார்க்கும் ஒன்றில் தீமை கிளம்பும் போது தான், வெறுப்பும், வேதனையும் ஏற்படும். அதனால் நன்மை நிறைந்த பெண்மையிலே ‘நச்சுத்தன்மை' எங்கேனும் தலை தூக்கி ஆடுமானால் அவ்வினத்தைச் சுற்றி வளைத்துப் பற்றி எரிக்கத் துணிகின்றது உலகம்.

ஒரு தவற்றை வேற்றார் வந்து இடித்துக் கூறுவதிலும் வேண்டியவர் இடித்துக் காட்டுவதும், திருந்தச் செய்வதும் சற்றே பெருமை எனலாம். எனலாம். உலகியலில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுவது உண்டு. இத்தகைய நிகழ்ச்சி இலக்கிய விருந்தாக அமையாமலும் இல்லை.

66

மன்னர் மன்னவன், மைந்தன் இராமன் மண்கொண்டு லருவான் - மணிமுடி சூடி வருவான் - என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள் மங்கையர்கள். ஆனால் அவனோ சிற்றன்னையின் ஏவலால் “தாழிரும் சடைகள் தாங்கி ஏழிரண்டு ஆண்டு காடு எய்தும் வரத்தைப் பெற்று மீண்டான் அரியணையில் சீருற இலங்க வேண்டிய இவன் அடவி செல்லுவதைக் காணவோ நின்றோம்? கொடுமை! பெண்ணாகப் பிறந்ததே கொடுமை! அதனினும் கொடுமை கண்பெற்ற பெண்ணாகப் பிறந்தது. பெண்ணே கொடுவினை செய்யும் இந்நாட்டிலே கண்பெற்ற பெண்ணாகப் பிறந்ததோ என்றும் மாற்ற முடியாக் கொடுமை!” என்று வெவ்வேறு வகையாகக் கூறி ஏங்குகிறார்கள்.

-

"பெண் ஒருத்தி கொடுவினை செய்கின்றாள். இதை மற்றைப் பெண்களாவது தட்டிக் கேட்க வேண்டும். தட்டிக் கேட்பதற்கும் ஆள்பவன் தனிச்சிறப்பு மனைவியாக இருக்கின்றாள். என்ன செய்ய முடியும்? ஒன்றே ஒன்று செய்திருக்கலாம்! அதுவும் நம்கையில் இல்லை. இந்நாட்டிலே - பெண், கொடுவினை செய்யும் நாட்டிலே பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது. பெண்ணாகப் பிறந்திருந்தாலும், கண்ணுள்ள பெண்ணாகப் பிறந்து இக்கொடுமையைக் காணும்படி இருந்திருக்கக் கூடாது என்று முகத்திலே அடித்துக் கொண்டு அழுகின்றார்கள்; விழுகின்றார்கள். இது கம்பன் காட்டும் படப்பிடிப்பு.

பெண்மையின் தன்மை எத்தகையது என்பதைப் பல கோணங்களிலிருந்தும் நிறுவிக் காட்டுகிறது இவ்விடம்.