உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம்

16

உணர்வு உடைய பெண்கள் உரை நிகழ்த்தி நைந்தார்கள். உள்ளம் வெதும்பி ஒடுங்கிய பெண்கள் ஒன்றும் உரையாராய் மூலையில் முடங்கிக் கிடந்து கண்ணீரும் கம்பலையுமாய் நின்றனர். ஆனால் ஒருத்தி ஓடிப்போயே விட்டாள், பெண் கொடுமை செய்வதைத் தன்னால் காண முடியாமல்! அவள் யாவள்?

கள்ளக் கருமையள் அவள். உலகம் தோன்றிய நாள் தொட்டு உலகாளும் பெருமையள் அவள்; அவள் போர்வையினால் மூடப்படாத இடமே இப்புவியில் இல்லை. அவள் அருள் நிழலிலே தங்கியவர் அனைவரும் புதுவீறு கொள்வர். அவள் தன் ஆட்சிக்கண் உள்ளவர்களுக்குத் உள்ளவர்களுக்குத் தந்துதவும் ஊட்டப் பொருள்களுக்கு ஓரளவு இல்லை. ஒரு பெண் மகள் செய்யும் பெரும் பழியை உலகின் நலங்கருதி வாழும் அந்நங்கை நல்லாளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணின் ஆட்சியிலே, ஒரு பெண் துணிந்து கேடு செய்யக் கிளம்பிவிட்டாள் என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? ‘மன்னவன் எப்படியோ அப்படியே மக்களும்' என்னும் முது மொழிக்கு ஏற்ப, ஒரு மகள் செய்யும் கேடு ஆளும் பெரு மகளையும் சேரத் தவறாதே! ‘இதற்குப் பொறுப்பாக இருக்க ஒருபொழுதும் முடியாது' என்று முடிவு செய்கின்றாள். அவளை, உறுத்தும் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து உலுக்கித் துன்புறுத்துகின்றன.

L

“கைகேயி இருக்கின்றாளே, இவள் முன்னெல்லாம் பெண் குலத்திற்கு எவ்வளவு பெருமை தந்தவளாக விளங்கினாள்! கருத்தொத்த வாழ்வு என்பதற்கு வேறொருவரை எடுத்துக்காட்ட எவரும் விரும்புவது இல்லை! மன்னர் மன்னவன் உயிரும், இம்மாதரசியின் உயிரும் வேறு வேறு என்று கூற முடியாது. இவர்களை, உடல் இரண்டு எனினும் உயிர் ஒன்றே என்று பாராட்டாதவர் உளரா? வேந்தர் வேந்தனும் வேறுள மனை வியர்களினும் இவளிடம் விருப்புக் கொண்டிருத்தது இதனால் தானே! அந்தப் புரத்திலே அமைந்து வாழ வேண்டிய இவள் அரசவையிலே அமைச்சருக்கு இணையாக அன்றோ இடம் பெற்று இனிது இருந்தாள்! உற்ற சமயங்களில் உதவும் மெய்க் காப்பாளியாக வேந்தனுக்கு இவளையன்றி வேறு எவர் இருந்தார். சீரிய முறையில் தேரோட்டிச் சிறந்த வீரனாகத் தயரதனை ஆக்கிய பெருமை இக்கைகேயிக்குத்தானே உண்டு. இவ்வாறு பலவகையாலும் அமைந்த தொடர்பும் இன்று நேற்று