உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

167

ஏற்பட்டதா? என்று திருமணம் நிகழ்ந்ததோ அன்று தொடங்கிய தொடர்பு. “சேணுலாவிய நாளெல்லகம் உயிர் ஒன்று போல்வன செய்து வந்த” உயர்நெடுந் தொடர்பு!”

66

இத் தொடர்புக்கு ஆட்பட்ட பெருமகன்தான் எத் தகையன்? இயலாத ஒருவனா? அவன் உடலிலே வலிமை அளத்தற்கு அரியவண்ணம் அமைந்து கிடக்கின்றது. அவ் வலிமையும் தன்னலத்திற்கெனப் பயன்படுத்தப் பட்டதோ எனின் இல்லை. வாட்டமுற்று, வகைகெட்டு, வருந்தி நின்றோர்க்கு வந்தேன் துணை, தந்தேன் வென்றி' என்று ஓடி ஓடி உதவுதற்கு என அமைந்தது அல்லவோ அது? அத்தகைய வலு உடையவன் இன்று நிமிர்ந்து நிற்க மாட்டாமல், தலையைத் தூக்கி நிறுத்த மாட்டாமல் கவிழ்ந்து புரள்கின்றானே! இந்த வல்லியலாளன், இம்மெல்லியலாளிடம் ஏன் வலுவிழந்து வதைந்து அடிமை போல் கிடக்க வேண்டும்? 'தருவேன் வரம்' என்ற வாய்மை தவறக் கூடாது என்னும் ஒரே ஒரு காரணத்தால்! இவன் தனக்குரிய வாய்மையைக் காக்கட்டும். இப்பெண் மகள் தனக்குரிய தாய்மையைக் காக்க வேண்டாமா?

“கோசிக முனியுடன் கொஞ்ச நாள் இருந்து வர இராமன் சென்ற பொழுதே மன்னவன் இன்னுயிர் வழிக் கொண்டாலெனப், பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்” எனப் புலவன் புலம்பி அரற்றக் கிடந்த மன்னவன் ஏழிரண்டு ஆண்டு வனம் ஏகும் கொடுமையை எப்படித் தாங்குவான்? இதைத்தெரிந்து கொள்ள முடியாதவளா கைகேயி? இராமன் கானேகத் தயரதன் வானேகுவான்' என்பதைக் கோசல நாட்டார் நன்கு அறிந்து காள்ளும் வண்ணமே, கோசிகன் இராமனைக் கூட்டிச் சென்று பின் வருவதை முன் அறிவித்தானே? இதைப் புரிந்து கொள்ளாமல், இரண்டு வரம் கேட்டு மூன்று விளைவுகளை உண்டாக்கலாமா? கேட்டதற்கு மேலும் 'கெடுவினை பெற எண்ணிக் கொண்டாளோ கொடுவினையாட்டி! இதற்குச் சுருக்கமாக உன் உயிரைத் தா என்றே நேரிடையாக மூன்றாம் வரமும் கேட்டிருக்கலாமே! கேட்டிருந்தால் முதல் வரமாக அதனைத் தயரதன் தந்து இன்புற்றிருப்பானே! தயரதன் வாய்மை கருதி வனமேகும் வரத்திற்கு இசைகின்றான். போகட்டும். இவ்வலியாள், நலியும் வரத்தால் பெண் குலத்திற்கே பெரும்பழி தேடிக் காடுக்கலாமா? அதையாவது எண்ணிப் பார்க்க

வேண்டாமா?

"வரம்பெற்ற மகிழ்ச்சியிலே வாய்மை மன்னன் சாவான் என்று கூடக் கவலை கொள்ளவில்லை இவள். இரக்கம் செத்த