உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

185

சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை சிரிக்குமா? ஓவியத்தில் உள்ளவள் ஓடி ஆடிக் களிப்பாளா, அவள் உயிர் ஓவியமாகத் திகழ்கிறாள் ஆகலின் காண்கிறாள்; களிக்கிறாள்; நோக்குகிறாள்; நோக்கெதிர் நோக்குகிறாள்; தாக்கணங்காக விளங்குகிறாள் அவள், “ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமாகத் திகழ்கிறாள்.” குமரகுருபரர் குறித்த ‘தெய்வக் காதல் நெஞ்ச' ஓவியங்களுள் ஈதொன்று.

நெஞ்சம் காதலுக்குத்தானா உறையுள்? சிலர் கொண்டுள்ள சீரிய நட்பு, செவ்விய காதலையும் வென்று விடுமோ?

காதல், பருவ ஒற்றுமை, பால் வேற்றுமை இவற்றிடையே அரும்பி வளர்வது. நட்போ, பருவ வேற்றுமை பால் ஒற்றுமை இவற்றிடையேயும் இனிதின் அரும்பி இலங்கும் இயல்பினது. காதலோ, புலக் குறும்புக்கு ஓரளவேனும் இடந் தாராது ஒழிவது இல்லை. ஆனால் நட்போ, புலக்குறும்பு புகுதலும் அறியாப் புனிதத்தில் ஓங்குவது. இவற்றால், காதலையும் வெற்றி கொண்டு விடுமோ கனிந்த நட்பு?

இயற்கைக் காதலும் இனிய நட்பும் முரண்படுபவை வ போலத் தோன்றினும் இணையானவையே! நட்பு, காதலாம்; காதல் நட்பாம்; புறப்படும் இடம், போகும் வழி இவற்றால் சிலச் சில வேறுபாடுகள் இருப்பினும் முடிவில் இரண்டும் ஒன்றானவையே! இத்தகையதை 'நட்புக் காதல்' என்பதா? ‘காதல் நட்பு' என்பதா? எப்படியுரைப்பினும் ஒப்புக்கொள்பவை வ

அவை.

உயர்வற உயர்ந்த ஒரு நட்புக் காதல் :

சென்னை நகரின் ஒரு பகுதி நுங்கன் பாக்கம். அது நுங்கன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்ததோர் ஊர். சங்க நாளில் வேங்கட மலைப் பகுதியைப் பாங்குடன் ஆட்சி செய்த வேந்தருள் ஒருவன் நுங்கன். அவன் தந்தை ஆதன். ஆகலின் அவனைச் சான்றோர் ‘ஆதனுங்கன்' என்றனர்.

ஆதனுங்கன்

அருங்கொடை யாளன். அறிவறிந்த பண்பாளன்; புலவர் தோழமைப் புகழாளன். அவன் பண்பிலே ஊன்றிப் பாடிய புலவர் ஆத்திரையன் என்பார். அவர் கள்ளில் என்னும் ஊரினர். ஆகலின் கள்ளில் ஆத்திரையனார் எனப் பெற்றார்.

ஆத்திரையனார் ஆதனுங்கனை ஒருகால் கண்டார்; களிப்புற்றார். அவனோ பிரிதல் அறியாப் பெருவிருப்பாளனாகத்