உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

187

வஞ்சமின்றி நெஞ்சத் திறந்து பழகும் நண்பர் எத்துணைப் பேர்! ஒவ்வொரு கோலம், ஒவ்வொரு நோக்கு, ஒவ்வொரு போக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, உள்ளொன்று புறம்பொன்றாம் நடிப்பு, உண்மையல்லாப் பசப்பு - இவற்றால் உருண்டு வரும் நட்புலகில் “என் நெஞ்சந் திறப்போர் நிற்காண்குவர்” என்னும் அந்த உணர்வு வாழ்வைத் தேடிக் கண்டலும் எளிதோ? நெஞ்சால் வாழ்ந்த அந்த வாழ்வு எங்கே? அந்த வாழ்வும் வருமோ?

66

வாழ்க! நெடிது வாழ்க; பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க; ஆல்போல் படர்ந்து அரசு போல் துளிர்த்து வாழ்க; நூற்றிதழ்த் தாமரை போல வாழ்க; மழைத் துளியினும் மணற்பெருக்கினும் மல்கி வாழ்க" என்று பற் பலவாறாக வாழ்த்து உரைப்பதைக் கேட்டுள்ளோம்.

வாழ்த்துரை ஒருவரை வாழ வைக்குமா? வாழ வைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மணவாழ்த்து முதல் எத் துணையோ வாழ்த்துகள் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. ‘ஆயிரம் திட்டு ஆனையையும் சாய்க்கும்” என்றால், “ஆயிரம் வாழ்த்து, பூனையையும் ஆனையாக்க வேண்டுமே."

66

வாழ்த்துதலால் வாழ்த்துவோர் வாய் இனிக்கும்; கேட் போர் செவி இனிக்கும்; வாழ்த்துக்கு உரியவர் நெஞ்சு இனிக்கும். இனியவை கூறுதலே கனியெனச் சொன்னால், செவ்விய வாழ்த்துதல் ஒளவையுண்ட நெல்லிக்கனி போல் அருஞ்சுவை உடையதாகும். அதனால் அன்றோ, “நீலமணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே” என்று ஔவையார் வாழ்த்தும் பேறு பெற்றான் அதியமான்! கனியாலா? கனி தந்த கனிவாலா? தான் வாழக் கருதாமல் தண்டமிழ் வாழ வாழும் ஒளவை வாழ வேண்டும் என்ற நேய நெஞ்சுக்கு உருகி நின்று, உரைத்த வாழ்த்தே இஃது.

‘ஒழிக' என்பதும் வாய்தான்! 'வாழ்க' என்பதும் வாய்தான். வாய்க்கு மணம் தருவது எது? ஒழிகவா? வாழ்கவா? மணம் தருவதைச்சொல்க; சொல்ல முடியவில்லையா? மணம் தராததைச் சொல்லாமலேனும் விடுக! அடியாமல் விட்டு விட்டால், தானே படுத்து விடும் பந்து! ஆட்டாமல் விட்டு விட்டால், தானே நின்று போகும் ஊசல்! நேரில் காண்பதை நிகழ்த்திக் காட்டுவது தானே முறை!

முதியவர் இளையரை வாழ்த்துவதா? இளையன் முதியரை வாழ்த்துவதா, யாரை யார் வாழ்த்துவது? இளையவர் முதியரை