உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

வணங்குவதும், முதியர் இளையரை வாழ்த்துவதும் வழக்கம். அதற்காக ‘இளையர் முதியரை வாழ்த்துதல் கூடாது' எனின் முறையன்றாம்.

உலகைப் படைத்த ஒருவனை வாழ்த்துகிறோம். அதற்குப் பெயரே கடவுள் வாழ்த்து! நாம் வாழ அவனை வாழ்த்துகிறோம்! அவ்வாறே, பெருமக்களும் நல்லோரும் வாழ்த்தப் பெறுவதால், பெருமையும் நன்மையும் வாழ்த்தப் பெற்று, நமக்கே நன்மை தருவதாம்! பன்னீரை இறைத்தால் இறைப்பவனுக்கு மணவாதா? சந்தனம் பூசிவிட்டால், பூசி விடுபவனுக்கு மணவாதா?

வாழ்த்துக்கு அடிப்படை உள்ளார்ந்த அன்பு. அவ்வன்புடை யோர் எவரையும் வாழ்த்தலாம். அவ் வாழ்த்து இருபாலும் இன்பம் சேர்க்கும்.

வாழ்த்தின் நோக்கம். எதையேனும் எதிர் நோக்குவது அன்று. ‘அது கிடைக்கும்' ‘இது கிடைக்கும்' என எதிர் பார்த்து வாழ்த்தும் வாழ்த்து, உண்மை வாழ்த்து அன்று! ஏமாற்று வேலை! பூசிப் பசப்பி ஏசிக் கழிக்கும் வேலை! வாழ்த்தின் நோக்கு வாழ்த்துதல் ஒன்றே!

கையசைவே வாழ்த்தா?

வாயசைவே வாழ்த்தா? கண்ணசைவே வாழ்த்தா? எதுவானால் என்ன? வாழ்த்துவார் நெஞ்சம் வாழ்த்தப் பெறுவார் நெஞ்சுக்கு நிறைவு செய்வதாய் அமைய வேண்டும். அவ்வளவே!

மணிக்கணக்காக வாழ்த்தும் வாழ்த்தில் உண்டாகும் உள்ள உருக்கத்தினும், மணித்துளிப் பொழுது வாழ்த்தும் வாழ்த்திலே, உருக்கம் மிக்கிருப்பது இல்லையா? அதனினும் கண்மணியசையும் ஓர் அசைவிலே உண்மை உருக்கம் வெளிப்பட்டுவிடுவது இல்லையா? வாழ்த்தின் மதிப்பீடு நெஞ்சத்து அளவேயன்றி, வேறு அளவு இன்று.

இதோ, ஒரு வாழ்த்து; நெடுங்காலத்துக்கு முற்பட்ட வாழ்த்து. ஆனால், காலத்தை வென்று இருக்கும் பசுமையாகத் திகழும் வாழ்த்து.

வாழ்த்துபவன் முடியுடை வேந்தன்; வாழ்த்துப் பெறுபவன் அவன் குடிபடைகளுள் ஒருவன். வாழ்த்துபவன் போரேர் உழவன்; வாழ்த்துப் பெறுபவன் சீரேர் உழவன்; வாழ்த்துபவன் மதிலும் கோட்டையும் மாடமும் கூடமும் மலிந்த மாநகராளி. வாழ்த்துப் பெறுபவன் வயலும், சோலையும், தோட்டமும்,