உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

205

இப்பாடல்களை நோக்குக. தம்மை மறந்து தாமே நூலாகி ஊனும் உளமும் உயிரும் உயிருக்கு உயிரும் ஒன்றியும், கலந்தும் பாடிப் பெற்ற ஒருமைப்பாட்டுக் கல்வியை அறிவோர், வள்ளலார் பெற்ற ஓதாக் கல்வியைத் தெளிவர் அல்லரோ?

14. நம்பியின் வினாவும் நங்கையின் விடையும்

வளமான வயல் ; வாய்த்த ஏரி; பகைவரைத் தடுக்கும் வல்லாண்மை மதில்; ஆழ்ந்த அகழ்; பக்கமெல்லாம் பறவைப் பாட்டு -இவற்றைக் கண்டு கண்டு களிப்புற்றான் ஒரு கட்டிளங் காளை! அவன் சுற்றிப் பார்த்த பார்வையில் ஓர் ஊர் தெரிந்தது. அதன் அருகே ஆறு ஒன்றும் ஓடியது. அவ்வாற்றிலே நீராடிக் கொண்டிருந்தாள் ஓர் அழகு நங்கை. அவளைக் கண்டு, "சேயரி உண் கண்ணாய், தையலாய், உன் ஊர்ப் பெயர் யாது? ஒத்துணரும் வண்ணம் உரை” என்றான்.

"சிற்றாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய்! வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரை”

என, நயமுறக் கேட்ட நம்பியின் வினாவுக்கு நங்கை தன் ஊர்ப் பெயரை நவின்றாளா? ஆம் நவின்றாள்! எப்படி? வெளிப் படையாகக் கூறாமல், வினாவில் அமைந்தவாறு ஒத்து உணரும் வண்ணம் குறிப்பாக உரைத்தாள்.

66

'கட்டலர் தாமரையுள் ஏழும் கலிமான்தேர்க்

கத்திருவ ருள்ஐந்தும் காயா மரமொன்றும்

பெற்றவிழ் தேர்ந்துண்ணாப் பேயின் இருந்தலையும்

வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால்

ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயர்”

என்றாள்.

இவ்வினாவும் விடையும் அமைந்த பாடலைப் பன்னிரண் L டடியான் வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பாவிற்கு எடுத்துக் காட்டாக உரையாசிரியர் காட்டியுள்ளார். (தொல். செய். 114) இதே பாடலைக் காட்டி து பன்னீரடியாற்