உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பெருவல்லத்தைச் சொன்ன பஃறொடை வெண்பா' என்று குறிப்பெழுதி இப் பாட்டுப் பூட்டைத் திறத்தற்குத் தாழ்க்கோல் உதவியுள்ளார் யாப்பருங்கல விருத்தி யுடையார் (யா. வி. 62). எனினும் பாட்டைத் திறத்தற்கு அரிதாகவே உள்ளது.

தொல்காப்பிய இளம்பூரணர் உரைப் பதிப்புக்கள் ஆகிய வற்றில் இப்பாடற் பொருளமைதி விளக்கம் பெறவில்லை. பெருந் தொகைத் திரட்டில் இப்பாடல் இடம் பெற்றிருந்தும் (2141) அதன் குறிப்புரையில் பொருள் விளக்கம் காட்டப் பெறவில்லை. யாப்பருங்கலப் புதிய பதிப்பில் அவ்வாறு விட்டுச் செல்ல விரும்பாமையால் இப்பாடற் பொருள் ஆராய்ச்சியில் பெரிதும் ஆழ்ந்து கண்ட விளக்கமே இக்கட்டுரையாம்.

'பெயர் விழையார்' என்பார் செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 2 இல், ‘பெருவல்லம்' ஒரு நூற்பெயராமா? என்ற தலைப்புடன் ஓர் ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார். அவ்வாராய்ச்சிக் கட் டுரையுள் தம் நண்பர் சிலர்க்கும், புலவர் சிலர்க்கும் இப்பாடற் பொருள்பற்றி அவாவிக் கேட்டும் தாம் பயன்பெறவில்லை என்று கூறி இப்பாடற்குத் தாம் பொருள் கண்டறிந்த வகையைக் குறித்துள்ளார்.

"சேயரி உண்கணாய், தையலாய் நின் ஊர்ப் பெயர் உரைத்தி” எனக் கூற, புருவத்தாள் ஏழும், ஐவரும், ஒன்றும், ருதலையும், இறுதியும் பெற்றக்கால் இயைந்தது என்றாள் எனக் கூட்டி முடித்துக் கொள்க.

-

பொருள்: ஏழு - பகரத்தில் ஏழாவது எழுத்து பெ

ஐவர் - ரகரத்தில் ஐந்தாவது எழுத்து ரு

ஒன்று - வகரத்தில் முதலாவது எழுத்து - வ

-

இருதலை லகரத்தில் ஒரு தலை - ல்

மேற்படி மற்றொரு தலை -ல

இறுதி - மகரத்தில் இறுதி - ம்

ஒத்தியைந்தவாறு பெருவல்லம்.

இவ்வாராய்ச்சிக் குறிப்பைக் கண்ணுற்ற புலவர் சிதம்பர புன்னைவனநாத முதலியார் அவர்கள் இதற்கு மறுப்பாக, செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 6 இல், “சிற்றியாறு.. வேற்புருவத்தாள்” என்று செய்யுளின் பொருளை விரித்து, கட்டலர் தாமரை, கலிமான் தேர்க் கத்திருவர், காயாமரம்,