உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

207

பெற்றவழித் தேர்ந்துண்ணாப் பேய், வித்தாத நெல் இவ்வைந்து தொடர்களும் இன்னின்ன பொருளைக் குறிப்பன என்பதை விளக்கி ஏழு, ஐவர், ஒன்று, இருதலை, இறுதி என்பவை இன்னின்ன சொற்களினின்றும் எடுக்கப் பெற்றுப் பெருவல்லம் என்று புணர்க்கப் படும் என்பதை விரித்துக் காட்டாது வாசிப்போரை மயங்கவைத்தது விசனகரமானது. நம் நண்பர் பெருவல்லம் என்றது மேற்படி செய்யுளினின்றும் இன்னவாறு பெறப்படுவது என்பதைக் கூடிய விரைவில் விளக்குவாராக என்று எழுதினார்.

செந்தமிழ்த் தொகுதி 16 பகுதி 7 இல் திரு. நா. கனகராசையர் அவர்கள் “அறியாமை வினா” என்று தலைப்பிட்டு எழுதி அதன் இறுதியாக,

“சிற்றியாறு... வேற்புருவத்தாள் என்ற செய்யுளிற் குறிப்புப் பொருள் குறித்ததெவ்வாறு? கட்டலர் தாமரையுள் ஏழு என்றால் என்னை? கத்திருவர் ஐவர் யாவர்? காயா மரமொன்று என்பதில் குறிப்பென்னை? பேயின் இருதலை என்பதில் உட்கிடை என்னை? வித்தாத நெல்லின் இறுதியாவது யாது? இவ்வைந்தும் சேர்த்துப் பெறும் மொழி யாது? யாப்பருங்கல விருத்தியாசிரியர் பெருவல்லம் என்னும் ஊர்ப் பெயரை எவ்வாறு அறிய வைத்தார்? அப் பெருவல்லம் என்னும் பெயரைக் கொணர்தற் பொருட்டு ( ப, ர, வ, ல, ம) இம் மெய்களை எங்கிருந்து பெறலாம்? இம்மெய்களை எடுத்தாண்ட குறிப்பை வெளிப்படுக்கச் செய்யுளில் அதிகார முண்டோ? இவ்வெழுத்துக்களைக் குறித்து ஏதேனும் அச் செய்யுளில் வந்திருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். அன்றி வேறு வகையால் பொருள் உணரக் கூடுமாயின் அதையும் அறிவான் உயர்ந்தோர் அறிவிப்பாராக” என எழுதினார்.

66

இவ்வாராய்ச்சியில் உன்னிப்பாக ஈடுபட்ட புலவர் திரு. ராமையங்கார் என்பார் செந்தமிழ்த் தொகுதி 27 பகுதி 3 இல், திரு. கனக ராசையர் பல வினாக்களை எழுப்பினார். பெயர் விழையார் விடையாதும் கூறவில்லை. யாரும் எம்முடிவுங் கூறவில்லை. இது விசயம் இம்மட்டோடு அடங்கிவிட்டது. யானும் இவற்றையெல்லாம் நோக்கிய பொழுது பலவாறு சிந்தித்ததுண்டு. கட்டலர் தாமரையுள் ஏழு என்பது தாமரையைக் குறிக்கும் ஏழுக்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய ஒரு ய சொல்லில் ‘பெ' என்ற எழுத்து ஏழாவது எழுத்தாய் அமைந் திருக்க வேண்டும் என்றும், மற்றவையும் அவ்வச் சொற்களில்

.