உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ் வளம்

16

அப்படியே அமைந்திருக்க வேண்டுமென்றுங் கருதிச் சில பொழுது முயன்று நிறைவேறாமையால் பயனில் முயற்சியெனக் கைவிட நேர்ந்தது. இருந்தாலும் இதைக் கண்டறிய வேண்டும் என்னும் அவா நீங்கவில்லை. அண்மையில் தொல்காப்பியச் செய்யுளியல் உரையைத் திருப்பிய பொழுது இச்செய்யுள் தென்பட்டது. உடனே கட்டலர் தாமரை முதலியவற்றிலே சிந்தனை செல்வதாயிற்று. புதிய வழியொன்று தென்பட்டது. முன் நினைத்தது போல் இச்செய்யுளின் பொருள் அவ்வளவு சிரமப்பட்டு அறியத் தக்கவாறு அமைந்திருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஒருவாறு முடிவும் ஏற்பட்டது. என் சிற்றறிவிற் கெட்டிய அம்முடிவைக் கீழே தருகின்றேன்” என்று கூறிப் பாடற் பொழிப்புரை வரைந்து, “இதனால் பெருவல்லம் எனப் பெயர் பெறப்படுமாறு” என விளக்கியுள்ளார்.

“தாமரை என்பது இங்கு அதன் பரியாய நாமமாகிய பங்கயம் என்பதைக் குறிக்க, ‘ஏழு’ என்பது அச்சொல்லின் முதலில் உள்ள பகரவர்க்கத்தின் ஏழாவது எழுத்தாகிய 'பெ’ என்பதைக் குறித்தது. எனவே கட்டலர் தாமரையுள் ஏழு என்பது ‘பெ’ என்னும் எழுத்தைக் குறிப்பான் உணர்த்துவதாயிற்று.

“கலிமான் தேர்க் கத்திரியர் ஐவர் என்பதில் ‘கத்திரியர்' என்பது அதன் பரியாய நாமமாகிய அரசர் என்பதைக் குறிக்க ஐந்து என்பது அதிலுள்ள ரகரத்தில் ஐந்தாம் எழுத்தாகிய ‘ரு என்னும் எழுத்தைக் குறித்தது. கத்திரியர் என்றதற்கேற்ப ‘ஐவர்' என்று உயர்திணையாற் கூறினார். கத்திரியர் - க்ஷத்திரியர், அரசர்.

"காயாமரம் என்றது அதன் பரியாயம் ஆகிய ‘பூவை’ என்னும் பெயரைக் குறிக்க ஒன்று என்பது அதிலுள்ள (வை) வகர வர்க்கத்தில் முதலெழுத்தாகிய வ என்னும் எழுத்தைக் குறித்தது.

“பேய் என்பது அதன் பரியாய நாமம் ஆகிய ‘அலகை' என்பதைக் குறிக்க அதன் இருதலை என்பது அதிலுள்ள லகரத்தின் இறுதியும் முதலும் ஆகிய ‘ல் ‘ல’, என்னும் எழுத்துக்களை முறையே குறித்தது.

“வித்தாத நெல் என்றது விதைத்து விளையாமல் தானே விளையும் நெல்லின் பெயராகிய ‘நீவாரம்' என்பதைக் குறிக்க, இறுதி என்பது அதிலுள்ள மகரத்தின் இறுதியாகிய ‘ம்' என்னும் எழுத்தைக் குறிப்பதாயிற்று.