உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் – பொருள்

209

னி, சேர்த்தக்கால் என்று செய்யுளில் கூறிய வண்ணம் இவற்றைச் சேர்த்தால் பெ - ருவல் - ல - ம் பெருவல்லம் என ஒத்தியைந்தவாறு கண்டு கொள்க.

இவ்வாராய்ச்சித் தொடர்கதை நிறைவு தந்திலது. புலவர் இராமையங்கார் கூறியது போல் வெள்ளிடை மலையாக விளங்கவும் இல்லை. ஆதலால் பொருள் காணும் ஆர்வம் மீதூரப் பெற்று ஆய்வில் தலைப்பட்டேன். அம் முயற்சியின் பயனால் விளைந்த பொருள் விளக்கத்தை வரைகின்றேன்.

தாமரையுள் ஏழு என்பது முதற் குறிப்பு. இக்குறிப்பின் விளக்கம் ‘தாமரை என்பதனுள் என் ஊர்ப் பெயரின் ஏழாம் எழுத்து உள்ளது' என்பதாம். ஏழு என்றும் குறிப்பால் அவள் சுட்டும் ஊர்ப் பெயர் ஏழு எழுத்துகட்கும் மிக்க எழுத் துடையதாக இருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. மற்றும் வித்தாத நெல்லின் இறுதி என்றதால் ஏழற்கு மேலேயும் எழுத்து இருக்க வேண்டும் என்றும் குறைந்தது எட்டு எழுத்துகளேனும் அவ்வூர்ப் பெயரில் இருத்தல் வேண்டும் என்றும் திட்டமிட்டேன். ஆனால், விருத்தியுரை ‘பெருவல்லம்' என்று ஆறு எழுத்துகளை யன்றோ குறிக்கின்றது!

பெருவல்லம், திருவல்லம், வல்லம், வல்லை என்னும் பெயர்களாலும் அழைக்கப் பெறும். பெருவல்லம் சேக்கிழார் அடிகளாரால் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில்,

66

“தீதுநீங்கிடத் தீக்காலி யாமவு ணற்கு

நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்

பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்”(30)

என்று புகழப் பெற்றுள்ளது. இத்திருப்பாடலில் தீக்காலி யாம் அவுணற்கு அருள் புரிந்த பேறு கூறப் பெற்றுள்ளது. அவ்வருட்பேறு கருதி வல்லத்திற்குத் ‘தீக்காலி வல்லம்' என்னும் பெயர் உண்டாயிற்று.

வடார்க்காடு மாவட்டம் திருவல்லம் சிவன் கோயில் கருவறைத் திருமதில் ஒன்றில் கண்ட கல்வெட்டில் திருத் தீக்காலி வல்லத்துக் கோயில் உண்ணாழிகை அதிகாரிகள் குறட்டி வரதையன் என்ற புலவர்க்கு அவர் அக்கோயிற் சிவபெருமான் மேல் திருவல்லை யந்தாதி பாடியதற்காக 100 குழி நிலம் இறையிலி வழங்கிய செய்தி கூறப் பட்டுள்ளது. (சாசனத் தமிழ்க்