உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

கவி சரிதம் பக். 208). இதனால் திருவல்லத்திற்குத் தீக்காலி வல்லம் என்னும் பெயருண்மை கல்வெட்டால் தெளிவுறுத்தப் பெறுதல் கொள்ளத்தக்கதாம். ‘தீக்காலி வல்லம்' என்னும் எட்டெழுத்துப் பெயரை ஒத்துரைக்கும் வண்ணம் உரைத்ததே இப்பாடல் என்பதைக் காணலாம்.

கட்டலர் தாமரையுள் ஏழு :

தாமரையுள் ஏழாம் எழுத்து உள்ளது. ‘தீக்காலி வல்லம்’ என்பதில் ஏழாம் எழுத்து 'ல', இவ்வெழுத்து தாமரையின் ஒரு பெயராகிய கமலம் என்பதில் அமைந்துள்ளமை அறிக.

·

கலிமான் தேர்க் கத்திருவருள் ஐந்து :

கலிமான் தேர்- விரைந்த செலவுடைய குதிரை பூட்டிய தேர். கத்திருவர் - அரசர். 'கத்திருவர்' என்பதில் ஊர்ப் பெயரின் ஐந்தாம் எழுத்துள்ளது. ஐந்தாம் எழுத்து 'வ' இப் பெயரிலும் அஃது ஐந்தாம் எழுத்தாய் அமைந்துள்ளமை அறிக. 'கத்திருவர் ஐவரும்' என்பது நூற்பாடமாக உள்ளது. கத்திருவர் என்பதற்கு ஏற்ப ஐவர் என எழுத்தைக் கூறினார் என்பர். ஆயின் ‘ஐந்தும்’ என்பதே சரியான பாடமாக இருக்கலாம் என்பது பாடல் அமைதியால் தெளிவாகும்.

காயாமரம் ஒன்றும்.

காய்க்கும் மரம், பெண் மரம்; காயாமரம், ஆண்மரம். “அகக்காழ் வன்மரம் ஆண்மர மாகும்

அவைகருங் காலி முதலா யுள்ளன

என்பது திவாகரம். ஊர்ப் பெயருள் காயாமரம் ஒன்று உள்ளது. அம்மரம் 'கருங்காலி' என்பதாம். அதனைக் ‘காலி’ என்று குறித்தார்.

பெற்றவிழ் தேர்ந்துண்ணாப் பேயின் இருந் தலை

எவ்வுயிரி ஆயினும் எல்லாப் பொருள்களையும் உண்பது ல்லை. தேர்ந்து உண்ணத் தக்கவற்றை - விரும்புமவற்றை மட்டுமே உண்ணும். அவ்வாறு தேர்ந்து உண்ணாமல் எதனையும் உண்ணும் ஒன்று தீ. உண்ணுவது- எரிப்பது. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று தீ; ஆதலால் பேய் என்றார். இருந் தலையாவது பெரிய தலை. தலையாவது முதல் எழுத்து. அது ‘தீ' என்னும் ஒரே முதலாக அமைந்த நெட்டெழுத்தைக் குறித்தது. இருதலை என்பது பாட வேறு. அவ்வாறாயின் ‘தீ’