உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

211

என்பது ஓரெழுத்து ஒருமொழி. ஆதலால் முதல் ஈறு ஆகிய இருதலையும் அதுவே என்க.

வித்தாத நெல்லின் இறுதி

விதையிட்டு விளைக்காமல் தானே

வித்தாத நெல், விதையிட்டு

விளையும் நெல். வித்தாத நெல்லின் இறுதியும் ஊர்ப் பெயரில் அமைந்துள்ளது. அஃதிரட்டுறலாக நெல்லின் இறுதி, ஊர்ப் பெயர் இறுதி இரண்டையும் சுட்டியதென்க.

பாரியின் பறம்பு மலை வளத்தைப் பாடும் கபிலர்,

“உழவர் உழாதன நான்குபய னுடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே”

என்கிறார். வெதிரின் நெல் மூங்கில் நெல். அது வெதிரம் எனவும் பெறும். "புல்லிலை வெதிர நெல்விளை காடே என்பது கயமனார் பாடிய அகப்பாட்டின் அடி (அகம். 397). ஆதலால் வெதிரம் என்பதன் ஈறாகிய ‘ம்' என்பது ஊர்ப் பெயர் ஈறாகவும் அமைந்தமை அறிக.

இனி 'ஐவனம்' என்னும் மலைநெல் எனலாமோ எனின், ஐவனத்தை வித்தியதாகவும் காத்ததாகவும் புறப் பாடல்கள் (159, 172) குறிக்கின்றன. ஆதலின் வெதிரம் என்பதே தகும்.

'நீவாரம்' என்றாரும் உளரே எனின் நீவாரம் என்பது புல் என்பதன்றி நெல் என்னார் என்க.

ஒத்து இயைந்தது

க்

இவற்றை ஒத்த வண்ணம் இயைத்துப் பார்த்தலால், க் என்னும் மெய்யும் ‘ல்' என்னும் மெய்யும் இடம் பெறும். இவ்வாறு மெய்களை இணைத்து முறைப்படுத்திக் கொள்வதையே ஒத்து இயைந்தது என்றார் என்க. முறைவைப்பு வருமாறு.

தேர்ந்துண்ணாப் பேயின் இருத்தலை - தீ

காயாமரம் ஒன்று - காலி

கத்திருவருள் ஐந்து - வ

தாமரையுள் ஏழு - ல

வித்தாத நெல்லின் இறுதி - ம்

ஒத்து இயைத்தலால் வருவன – க், ல் இவற்றைச் சேர்த்தலால் ‘தீக்காலி வல்லம்' என்னும் பெயர் உருப் பெறுதல் காண்க.